
Weight loss tips: உடல் எடை குறைப்பு என்பது ஒரு பயணம் போன்றது. ஒரே இரவில் நடக்கும் மாயாஜாலம் அல்ல. நீங்கள் எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும், ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றினாலும், அந்த செயல்முறைக்கு உறுதுணையாக இருக்கும் சில எளிய விஷயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது மூலிகை பானங்கள்.
மேலும் படிக்க: அதிகமான புரதம், முழு ஆரோக்கியம்; இந்த வகையில் முட்டை சாப்பிட்டால் இரட்டை பலன்!
இந்த பானங்கள் உடனடியாக அதிசயங்களை நிகழ்த்தாது என்றாலும், ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றுவதை இவை எளிதாக்குகின்றன. உடல் எடை குறைக்கும் இலக்குடன் இருப்பவர்கள் முயற்சி செய்ய வேண்டிய ஐந்து மூலிகை பானங்கள் குறித்து இதில் காணலாம்.
பலர் முயற்சிக்கும் முதல் மூலிகை தேநீர் இதுதான். க்ரீன் டீ பரிந்துரைக்கப்படுவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. க்ரீன் டீ பேக்கை நீண்ட நேரம் கொதிக்க வைத்தால் கசப்பு தன்மை ஏற்படும். ஆனால், இரண்டு நிமிடங்களுக்கு மட்டும் அதை கொதிக்க வைத்தால், சுவை மென்மையாகவும், அருந்த இனிமையாகவும் இருக்கும். இது உங்களுக்கு ஒரு லேசான ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது. இதில் உள்ள அன்டிஆக்ஸிடன்ட்கள் கொழுப்பை குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுவதாக கூறப்படுகிறது.
சளி மற்றும் இருமலுக்கான வீட்டு வைத்தியம் என்றால் நினைவுக்கு வரும் பொருட்களில் இஞ்சி முக்கியமானது. அதற்கும் மேலாக, இஞ்சி தேநீர் செரிமானம் மற்றும் பசி கட்டுப்பாட்டிற்கு அற்புதமானது. காலையில் இஞ்சி தேநீர் குடிப்பதால், நாள் முழுவதும் சிற்றுண்டி சாப்பிடும் உணர்வை குறைக்க உதவுகிறது. மேலும், அதிக உணவு உண்ட பின் ஏற்படும் வயிற்று உப்புசத்தை குறைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை நறுக்கி, சுமார் 5 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக அருந்தவும். மேலும், புத்துணர்ச்சியான சுவைக்கு சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சி முதல் சருமப் பொலிவு வரை... தேங்காயின் நன்மைகள்!
செம்பருத்தி தேநீர் அதன் பிரகாசமான சிவப்பு நிறத்தால் உடனடியாக கவனத்தை ஈர்க்கும். இது தேநீர் என்பதை விட ஜூஸ் போல் தோற்றம் அளிக்கும். இந்த தேநீர் உடலில் இருந்து தேவையற்ற நீரை வெளியேற்றவும் , வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும் உதவும். இதன் சுவை சற்று புளிப்பாக இருக்கும். இதன் சுவைக்கு பழக சிறிது நேரம் ஆகலாம். இது சோடா போன்ற செயற்கை பானங்களுக்கு பதிலாக ஒரு புத்துணர்ச்சியூட்டும் மாற்றாக அமையும்.
உங்களுக்கு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு அதிகம் இருந்தால், இலவங்கப்பட்டை தேநீர் ஒரு மாற்றத்தை உருவாக்கலாம். இதில் இயற்கையான இனிப்பு சுவை இருப்பதால், நீங்கள் இனிப்பு எதுவும் சாப்பிடாமலேயே அதன் உணர்வை கொடுக்கும். இலவங்கப்பட்டையை சுமார் 10 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தவும். இதன் நறுமணம் மனதிற்கு இதமளிப்பதுடன், சுவையும் நிறைவாக இருக்கும்.

தயாரிப்பதற்கு மிகவும் எளிமையான தேநீர்களில் புதினா தேநீர் ஒன்றாகும். எனினும், இதில் ஏராளமான பலன்கள் நிறைந்துள்ளன. புதினாவின் நறுமணமே பசியை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது செரிமானத்திற்கும் மிகச் சிறந்தது. அதிக உணவு உண்ட பிறகு, புதினா தேநீர் அருந்துவது வயிறு உப்புசத்தை குறைக்கும். இதில் காஃபின் இல்லை என்பதால், உங்கள் தூக்கத்தை பாதிக்காது. இதை மாலையில் அல்லது இரவில் கூட நீங்கள் அருந்தலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com