herzindagi
mudumalai visit places

முதுமலை எதுக்கு ஃபேமஸ் தெரியுமா?

கேரளா, கர்நாடகாவுக்கு அருகில் தமிழக எல்லையில் இருக்கும் முதுமலையில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். 
Editorial
Updated:- 2023-03-01, 09:47 IST

தமிழகம் சுற்றுலாத்தலங்களுக்கு பெயர் போனது. மற்ற மாநிலத்துக்கு சுற்றுலா செல்வதற்கு முன்பு, நம்ம ஊரில் இருக்கும் முக்கியமான இடங்களை முதலில் பார்த்து விட்டோமா? என ஒருமுறை யோசியுங்கள். ஏகப்பட்ட இடங்கள் நிச்சயம் பார்க்க இருக்கும். அந்த லிஸ்டில் முதலில் இருப்பது முதுமலை. கேரளா, கர்நாடகாவுக்கு அருகில் தமிழக எல்லையில் அமைந்திருக்கும் முதுமலை புலிகள் காப்பகமாக தான் பலருக்கும் தெரியும். ஆனால் அதையும் தாண்டி இங்கு சுற்றிப்பார்க்க பல இடங்கள் உள்ளன.

இயற்கை எழில் பொங்கும் அழகு, பறவைகளின் சத்தத்துடன் இங்கு இருக்கும் பூங்கா, நீர் வீழ்ச்சி, சஃபாரி ஆகியவை உங்களை இன்னும் பரவசமாக்கும். அந்த வகையில் இந்த பதிவில் முதுமலையில் விசிட் அடிக்க வேண்டிய முக்கிய இடங்கள் குறித்து பார்ப்போம் வாருங்கள். முதுமலையில் 55 வகையான பாலூட்டிகள், 227 வகையான பறவைகள், 21 வகையான நீர்வீழ்ச்சிகள் ஆகியவை இந்த இடத்தை சொர்க்கமாக உணர வைக்கின்றன. குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க முதுமலை மிகச் சிறந்த தேர்வாக உள்ளது.

இந்த பதிவும் உதவலாம்:தமிழ்நாட்டில் காணப்படும் ஹனிமூனுக்கு ஏற்ற இடங்கள்

முதுமலை தேசிய பூங்கா

முதுமலை என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது தேசிய பூங்கா. இங்கு ஆண்டு முழுவதும் இனிமையான வானிலை நிலவுகின்றது. வெயிலை உணர முடியாது. சாலை வழியாகவும் பயணம் செய்வது மிக மிக சுலபம். முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினால் ஒழுங்கு செய்யப்பட்ட முறையான சவாரி வசதிகளும் உள்ளன. இந்த சரணாலயத்தின் பரப்பளவு 321 சதுர கீ.மீ. இதில் 108 சதுர கி.மீ தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

mudumalai travel

மற்ற இடங்கள்

முதுமலை வரவேற்பு மையம், வாகன சவாரி மையம், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் ஆகியவை முதுமலையில் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களாக உள்ளன. . இதேபோன்று கூடலூர் பகுதியில் உள்ள ஊசிமலை, தவளைமலை, நடுவட்டத்தில் உள்ள ஆங்கிலேயர் கால சிறைச்சாலை, பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கட்டாயம் கண்டு ரசிக்கலாம்.

mudumalai national park

சாகச சஃபாரிகள் மற்றும் இயற்கை முகாம்களுடன், முதுமலை காடு சுற்றுலா பிரியர்களுக்கு சொர்க்க பூமி என்று சொன்னால் அது மிகையல்ல. கட்டாயம் நேரம் கிடைக்கும் போது குடும்பத்துடன் சென்று வாருங்கள்.

இந்த பதிவும் உதவலாம்:மகாபலிபுரத்தில் சுற்றி பார்க்க வேண்டிய 5 சுற்றுலா இடங்கள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com