ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் அமைந்திருக்கிறது தனுஷ்கோடி. மீனவ நகரமான இது நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலாதலமும் கூட. 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலால் மண்ணோடு மண்ணாகி, சிதிலடைந்து கிடைக்கும் தனுஷ்கோடியில் இன்றும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஆங்காங்கே வசித்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாவாசிகளுக்கு இவர்களே வழிக்காட்டியாக உள்ளனர்.
கோயில் தொடங்கி, தேவாலயங்கள், கட்டிடங்கள், ரயில் நிலையம் என இங்கு பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளன. அதுக் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். எனவே, தனுஷ்கோடி சுற்றுலா செல்பவர்கள் அதை சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்:முதுமலை எதுக்கு ஃபேமஸ் தெரியுமா?
இந்தியாவின் முதல் கடல் பாலம் என்பது அனைவரும் அறிந்தது. ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து 11. கி.மீ தொலைவில் பாம்பன் பாலம் உள்ளது. ஒரேவேளை ரயிலில் சென்று பாம்பன் பாலத்தை ரசிக்க விரும்பினாலும் அதுவும் உங்களின் விருப்பம் தான். சரியாக 6 நிமிடம் ரயில் கடந்து செல்லும் வரை பாம்பன் பாலத்தை கண்டு ரசிக்கலாம். மிகப் பெரிய தீவை கடப்பது போல் அனுபவத்தை இந்த நேரத்தில் நீங்கள் உணரலாம் .
ராமேஸ்வரத்தில் இருக்கும் கோயில்களில் மிகவும் முக்கிய கோயில்களில் ராமநாதசுவாமி கோவிலும் ஒன்று. சீதா குவித்த மணலால் லிங்கம் உருவானது. அந்த லிங்கம் தான் இந்த கோயிலில் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த கோயிலில் இருக்கும் தூண்கள் 30 அடி உயரம் கோண்டவை. மொத்தம் 1212 தூண்கள் உள்ளன. ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலுக்குள் உள்ள 22 கிணறுகளிலும் புனித நீராடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
குடும்பத்துடன் இங்கு செல்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் தனுஷ்கோடி ஆலயம், அக்னி தீர்த்தம், அன்னை இந்திரா காந்தி சாலை பாலம் ஐந்து தலை அனுமன் கோவில், கந்தமதன பர்வதம் அரியமான் கடற்கரை ஆகியவை மிகவும் முக்கியமானவை.
இந்த பதிவும் உதவலாம்:மகாபலிபுரத்தில் சுற்றி பார்க்க வேண்டிய 5 சுற்றுலா இடங்கள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com