தேனிலவு கொண்டாட முசோரி - மலைகளின் ராணியில் இன்பம் பொங்கும் சுற்றுலா

மலைகளின் ராணி என்றழைக்கப்படும் முசோரிக்கு தேன் நிலவு, சுற்றுலா செல்ல திட்டமிடும் நபர்களுக்கு இந்த பதிவு உதவிகரமாக இருக்கும். தமிழகத்தில் இருந்து முசோரியை சென்றவடைவது எப்படி ? முசோரியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
image

இமயமலை தொடரில் அமைந்துள்ள அற்புதமான சுற்றுலா தலமான முசோரி மலைகளின் ராணி என்றழைக்கப்படுகிறது. ஊட்டி தானே மலைகளின் ராணி என நீங்கள் சந்தேகிக்கலாம். இந்தியாவை பொறுத்தவரையில் மலைகளின் ராணி என்றால் அது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மாவட்டத்தில் அமைந்துள்ள முசோரி தான். டேராடூனில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவிலும், டெல்லியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலும் முசோரி இருக்கிறது. வட இந்தியாவிற்கு தேனிலவு திட்டமிடும் தம்பதிகள் பலரும் மணாலி, ஷிம்லா திட்டமிடுகின்றனர். எனினும் அவற்றுக்கு இணையாக இயற்கை எழில் நிறைந்த சுற்றுலா தலங்களை முசோரி கொண்டுள்ளது.

mussoorie attraction spots

முசோரி சுற்றுலா தலங்கள்

கெம்ப்டி நீர்வீழ்ச்சி

நீங்கள் முசோரி சென்றால் எக்காரணம் கொண்டும் தவறவிடக்கூடாத இடம் கெம்ப்டி நீர்வீழ்ச்சி. சுமார் 40 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். மலைப்பகுதியில் அமைக்கப்பட்ட படிகட்டுகள் வழியாக இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம். இங்கு குளிப்பதற்கு அனுமதியுண்டு. ரோப் கார் வழியாக நீர்வீழ்ச்சியை அடைய ஒரு நபருக்கு 200 ரூபாய் கட்டணமாகும். அருவிப் பகுதி நீச்சல் குளம் போல இருக்கும். அச்சமின்றி நீரில் இறங்கி குளிக்கலாம்.

kempty falls

கம்பெனி கார்டன்

கம்பெனி கார்டன் லைப்ரரி பஜார் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ளது. இங்கு உள்ளே நுழைவுக்கட்டணம் 20 ரூபாய். ஆரம்பத்தில் வண்ண வண்ண நிறத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும். அடுத்ததாக பிரபலங்களின் மெழுகு அருங்காட்சியகம் உள்ளது. அமிதாப் பச்சன், முன்னாள் இந்திய பிரதமர்கள், அமெரிக்க அதிபர்கள், திரை நட்சத்திரங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். சிறுவர்களுக்கான படகு சவாரி, மினி 7டி திரையரங்ககும் இங்கு இருக்கிறது. வெளியே வந்தவுடன் குளிர் காய்வதற்கு ஆங்காங்கே கேம்ப் ஃபயர் அமைக்கப்பட்டு இருக்கும்.

george everest mussoorie

ஜார்ஜ் எவரெஸ்ட் சிகரம்

முசோரியில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் ஜார்ஜ் சிகரம் வரும். இங்கிருந்து இமயமலை தொடரின் அழகினை கண்டு ரசிக்கலாம். முசோரியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்க்க இருசக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துங்கள். ஏனெனில் கார் கட்டண வாடகை அதிகம். ஜார்ஜ் எவரெஸ்ட் தலத்தில் இரண்டு முக்கிய இடங்கள் உண்டு. சமவெளி, பீக் பாயிண்ட். உள்ளே செல்ல சோதனைச்சாவடியில் 250 ரூபாய் செலுத்த வேண்டும். 2 கிலோ மீட்டர் நடந்து சென்றால் சமவெளிப் பாதையில் இருந்து மலைதொடரை காணலாம். பீக் பாயிண்ட் செல்ல 45 நிமிடங்கள் நடக்க வேண்டும். அங்கிருந்து பார்த்தால் முசோரி உங்களுடைய காலுக்கு அடியில் இருப்பது போல தெரியும். சூரிய மறைவை காண அற்புதமான இடம் இந்த ஜார்ஜ் எவரெஸ்ட். உங்களுடைய பாதுகாப்பிற்காக பாதுகாவலர்கள் நேரத்தீற்கு உங்களை வெளியேற்றிடுவார்கள்.

மால் ரோடு

முசோரியில் எங்கு செல்ல வேண்டுமானாலும் மால் ரோடு பகுதிக்கு வந்துவிடுங்கள். இங்கு நிறைய கடைகள் உண்டு. தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம். கைவினை பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கும்.

tamil nadu to mussoorie tourism

பட்டா நீர்வீழ்ச்சி

பொழுது சாயும் நேரத்தில் புத்துணர்வு பெற உகந்த இடம் பட்டா நீர்வீழ்ச்சி. இங்கு உற்சாக குளியலும் போடலாம். நீர் வழிப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் அமர்ந்து உணவும் சாப்பிடலாம். அடிவாரப் பகுதியில் இந்த இடம் இருப்பதால் ரோப் கார் கட்டணமாக 200 ரூபாய் செலுத்த வேண்டும்.

camels back

மேலும் படிங்ககுறைந்த செலவில் தமிழ்நாடு டூ தாஜ்மஹால் சுற்றுலா; நுழைவுக் கட்டணம், தங்குமிட வசதி விவரம்

பிரகாஷேஸ்வர் சிவன் கோயில்

இந்த கோயிலின் சிறப்பம்சம் நீங்கள் காணிக்கை செலுத்த முடியாது. ஏனெனில் காணிக்கை செலுத்தினால் இரட்டிப்பாக அந்த பணம் உங்களை அடையுமாம். மேலும் பளிங்கு கற்களால் ஆன சிவ லிங்கத்திற்கு நேரடியாக உங்கள் கைகளால் அபிஷேகம் செய்யலாம்.

முசோரிக்கு பட்ஜெட் சுற்றுலா

சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லும் தமிழ்நாடு இரயிலில் இரண்டு நாள் பயணித்து அங்கிருந்து டேராடூன் செல்ல 2 மணி நேரம் ஆகும். இதற்கு மொத்தமாக அப் டவுன் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் செலவாகும். முசோரியில் இரண்டு நாட்கள் தங்கிட 3 ஆயிரம் ரூபாய், இருசக்கர வாடகை வாகனம் 2 ஆயிரம் ரூபாய், உணவுக்கு 3 ஆயிரம் ரூபாய், ரோப் கார் வசதி, நுழைவுக் கட்டண செலவுகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் என 15 அயிரம் ரூபாய் செலவில் முசோரியில் தேனிலவு கொண்டாடலாம்.

இன்னும் சில இடங்கள் உள்ளன. நீங்கள் இரண்டு நாள் பயணம் திட்டமிட்டு இருந்தால் இந்த இடங்களை தவறவிடாதீர்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP