சுற்றி கடற்கரையில், வழி முழுக்க மரங்கள், தமிழர்களின் கட்டிடக்கலையின் அழகு என இயற்கை எழில் கொஞ்சும் இடமாக உள்ளது மாமல்லப்புரம் என சொல்லப்படும் மகாபலிபுரம். கோடைக்கால விருமுறை, வார இறுதி நாட்களில் விடுமுறை பொழுதை கழிக்க நினைப்பவர்கள் தாரளமாக மகாபலிபுரத்தை தேர்ந்தெடுக்கலாம். நண்பர்களுடன், குடும்பத்துடன், குழந்தைகளையும் அழைத்து செல்ல சரியான தேர்வு. பயண நேரமும் குறைவு என்பதால் ஒருநாள் காலை தொடங்கி மாலை வரை சந்தோஷமாக சுற்றி பார்த்து விட்டு இரவு வீடு திரும்பலாம்.
அந்த வகையில் மனதை மயக்கும் மகாபலிபுரத்தில் மிஸ் செய்யக்கூடாத இடங்கள், கட்டாயம் பார்க்க வேண்டிய 5 சுற்றுலாத்தளங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
அர்ஜுனனின் தபசு
மகாபலிபுரம் செல்பவர்கள் கட்டாயம் இந்த இடத்தை சென்று பார்க்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள் இந்த இடத்தை பார்வையிட்டால் பல வரலாற்று விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். இங்கு, சுமார் 96 அடி நீளமும் 43 அடி உயரமும் கொண்ட பாறையின் மீது வானவர்கள், மனிதர்கள், யானை உள்ளிட்ட மிருகங்களைத் தத்ரூபமாக செதுக்கி இருப்பார்கள். ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 150க்கும் மேற்பட்ட சிற்பங்கள் அர்ஜுனனின் தபசில் இடம் பெற்றுள்ளன. பல்வர்களின் சிற்பக்கலைக்கு இதுவும் ஒன்று சான்று.
இந்த பதிவும் உதவலாம்:வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் அப்படியென்ன ஸ்பெஷல்!
கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து
பெரிய உருண்டை வடிவில் சரிந்து ஓடுவது போல் காட்சியளிக்கும் கருங்கல், கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து எனவும் அழைக்கப்படுகிறது. இது 250 டன் எடை கொண்டது. நிச்சயம் இந்த இடம் உங்களை ஆச்சரியப்படுத்தும். புகைப்படம் எடுக்கவும் சிறந்த இடமாக உள்ளது.
அருங்காட்சியகம்
முந்தைய காலத்தில் கலங்கரை விளக்கத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள், வரலாற்று சின்னங்கள் ஆகியவை இந்த அருங்காட்சியத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
குடைவரைக் கோயில்
பச்சை புல்வெளிகளுக்கு மத்தியில் நீலக் கடலுடன் இருக்கும் குடவரைக் கோயில்களை நிச்சயம் பார்க்க வேண்டும். இங்கு அமைந்துள்ள தலசயன பெருமாள் கோயிலும் கட்டிடக்கலையின் மற்றொரு மைல்கல். இந்தக் கோயிலுக்கு எதிராக புஷ்கரணி குளமும் உள்ளது. சிறந்த குடைவரைக் கோயில்களில் ஐந்து ரதமும் ஒன்றாகத் திகழ்கிறது.
ஐந்து ரதம்
சிங்கம், யானை ஆகியவற்றின் மிகப் பெரிய சிலைகளுடன் பிரம்மாண்டத்தின் உச்சமாக உள்ளது ஐந்து ரதம். மகாபலிபுரதத்தில் வரும் பஞ்ச பாண்டவர்களான தர்மன், அர்ஜூனன், பீமன், சகாதேவன், நகுலன் ஆகியோரின் பெயர்களில் ஐந்து ரதங்களும் அழைக்கப்படுகின்றன. மகாபலிபுரம் செல்பவர்கள் கட்டாயம் இந்த இடத்தை தவறாமல் விசிட் அடிக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்:தமிழ்நாட்டில் காணப்படும் ஹனிமூனுக்கு ஏற்ற இடங்கள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation