தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா ஐயா படத்தில் அறிமுகமாகும் போது ஜப்பி கேர்ள் என்ற பெயரை பெற்றார். தமிழ் சினிமாவுக்கு எப்போதும் சற்றும் குண்டான நடிகைகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கும். சாவித்ரி தொடங்கி குஷ்பு, ராதிகா, மும்தாஜ், ஜோதிகா என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையிலும் நயன்தாராவும் இடம்பெற்றார்.
ஆனால் போக போக,படத்திற்கு ஏற்ற கதாபாத்திரங்கள் மாற மாற உடல் எடையை குறைக்க தொடங்கினார். பில்லா படத்தில் நீச்சல் உடையில் நயனின் என்ட்ரி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பின்பு சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் ஒதுங்கி இருந்தவர் ராஜா ராணி மூலம் கம்பேக் கொடுத்தார். அதன் பின்பு கோலிவுட்டில் நயன் ஹாட்ரிக் வெற்றிகளை கொடுக்க தொடங்கினா. உடல் எடையிலும் அதிக கவனம் செலுத்தினார். அதற்கு அவர் பின்பற்றிய விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
இந்த பதிவும் உதவலாம்:டிஆர்பியில் முதலிடம் பிடித்த சன் டிவி சீரியல் எது தெரியுமா?
உடற்பயிற்சியில் யோகா தான் நயனின் முதல் தேர்வாக உள்ளது. தனியாக யோகா பயிற்சியாளரை வைத்து கொண்டு தினமும் தவறாமல் யோகா செய்து வருகிறார். யோகா மற்றும் உடற்பயிற்சி தவிர, நயன்தாரா தனது தூக்க நேரத்தில் எந்த வித சமரசமும் செய்து கொள்ள மாட்டார். 8 மணிநேரம் தூக்கத்திற்காக நேரம் ஒதுக்குகிறார்.
காய்கறிகள், இறைச்சி, முட்டை, மீன் மற்றும் பழங்கள் அனைத்தையும் கலந்து சாப்பிடுகிறார். தினமும் இளநீர் எடுத்து கொல்வது கூடுதல் தகவல். அதே போல் தண்ணீர் மற்றும் தர்பூசணி ஜூஸை நயன் அதிகளவு குடிக்கும் பழக்கம் கொண்டவர்.
நயன், மாலை நேரத்தில் ஜிம் தொடர்பான உடற்பயிற்சிகளை செய்கிறார். அதற்காக தனி ட்ரெயினரும் வைத்திருக்கிறார். அவர்களின் ஆலோசன் படியே அதிக உடல் உழைப்பு தரும் பயிற்சிகளை மேற்கொள்ளாமல் எளிமையான அதே நேரம் கொழுப்பை எரிக்கும் பயிற்சிகளை மட்டுமே நயன் மேற்கொள்கிறார்.
இந்த பதிவும் உதவலாம்:தமிழ் நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்த்து இருக்கீங்களா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com