herzindagi
Thalapathy

Thalapathy 68: விஜயின் தளபதி 68 பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது

தளபதி 68 படத்திற்கான பூஜையை  விஜய் முடித்து படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டார்
Editorial
Updated:- 2023-10-27, 15:23 IST

விஜயின் தளபதி 68 படப்பூஜை சிம்பிளாக அழகாகப் படக்குழு நடத்தியுள்ளது. விஜயின் லியோ  படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. 450 கோடிக்கு மேல் வருமானங்களைப் பெற்றுள்ள விஜயின் லியோ படமானது இன்னும் 700 கோடிக்கு மேல் இந்தப் படம் வசூல் செய்யும் என்று தகவல்களும் கிடைத்துள்ளன. விஜயின் லியோ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருகின்றது. மேலும் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும் நல்ல பெயர் இந்தப் படத்தில் கிடைத்திருக்கின்றது. லியோ படம் ரசிகர்களிடையே இன்னும் அதிக  வரவேற்ப்புடன் இடத்தைப் பெறும் தீபாவளி வரை சக்கை போடு போடும் என்று மக்கள் பேசிக் கொண்டிருக்கையில் அந்த ஆரவாரம் அடங்குவதற்கு முன்பே விஜய் தனது அடுத்த படமான தளபதி 68 படத்திற்கு பூஜை போட்டு விட்டார். இவருடன் இணைந்து பிரபலமான நடிகர்கள் களத்தில் இறங்குகின்றனர். மேலும் காமெடியுடன் நல்ல கதை அம்சம் கொண்ட படமாக விஜய்க்கு தளபதி 68 அமையும் என்று சொல்லப்படுகின்றது.

 

மேலும் படிக்க: பிக்பாஸ் சீசன் 7 ரேங்கிங் டாஸ்க் முதல் இடத்திற்கு முந்தும் பிரதீப்

நடிகர் விஜய் நடிக்கும் 68 வது படம் தளபதி 68 பட்டித் தொட்டி எங்கும் ட்ரெண்டிங் ஆகி கொண்டிருக்கின்றது. இப்படத்தில் விஜயுடன் பிரபுதேவா பிரசாந்த் ஆகியோர்  நடிக்கின்றனர். படப் பூஜைகள் ஆரம்பம் ஆகிவிட்டது லியோ வெற்றி கோஷம் அடங்கும் முன்பு தளபதி 68 விஜய் ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா அப்டேட் என்றே சொல்ல வேண்டும். தளபதி 68 படத்தை இயக்கப் போவது வெங்கட் பிரபு என்ற தகவல் நமக்கு முன்பே தெரியும். அவருடன் இணைந்து விஜயுடன் தளபதி 68 படத்தில் பிரஷாந்த் இணைந்து நடிக்க இருக்கிறார். படப் பூஜையில் அவர் பங்கேற்று இருக்கிறார். 90களில் ஆரம்பத்தில் பிரசாந்த் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கின்றார் மற்றும் விஜய்யுடன் இணைந்து நடிக்க ஒரு பெரும் பட்டாளமே இருக்கின்றது.

 

விஜயின் தளபதி 68 ஆம் படத்தில் மீனாட்சி சவுத்ரி நடிக்கின்றார் அவருடைய போட்டோ ஷூட்டுகள் தற்போது ட்ரெண்டிங்காகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

தளபதி 68 படத்தின் பூஜை விறுவிறுப்பாக வெற்றிகரமாக நடந்திருக்கின்றது. விஜய் மற்றும் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் இந்தப் பூஜையில் கலந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தளபதி 68 படத்தில் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாக்ஷி ஆகியோரும் நடிக்கின்றனர். தளபதி 68 ஆம் படம் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்காவில் இரண்டாம் கட்டமாக நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும. தளபதி 68 எண்களில் வருவதால் இந்தப் படம் டைம் டிராவல் பற்றியது என்றும் கசிய தொடங்கி இருக்கின்றது. விஜய் இதில் 25 வயது மற்றும் 50 வயது என இரு தோற்றங்களிலும் நடிக்க இருக்கின்றார் என்ற தகவல்களும் தெரிய வந்துள்ளது.

 

மேலும் படிக்க:  நடிகர் கார்த்தியின் காமெடி கிரைம் படமான ஜப்பான் டீசர் ரிவ்யூ

 

 வெங்கட் பிரபு பொதுவாகத் தனது கதையைக் காமெடி கலந்து சுவாரசியமாக வெளிப்படுத்துவார். இந்த முறையும் சுவாரசியங்கள், ட்விஸ்டுக்கு பஞ்சம் இருக்காது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. விஜய்க்கு இந்தப் படம் ஒரு ரிலாக்சிங் படமாக இருக்கும் என்றும் நம்பப்படுகின்றது.

 

Image source: Google 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com