ஜப்பான் தமிழ் மூவி படத்திற்கான டீசர் வெளியீடு வெளியிடப்பட்டுள்ளது ஒரு நிமிடம் 25 நொடிகள் வெளியிடப்பட்டிருக்கும் டீசர் சிறப்பாக வெளிவந்திருக்கின்றது. ஜப்பான் படம் கிரைம்-காமெடி, திரில்லர் ஆகும். நடிகர் கார்த்தி நடிக்கும் ஜப்பான் வித்தியாசமான ஒரு லுக்கில் கார்த்தி சிறப்பாக நடித்திருக்கின்றார் என்பதை ட்ரைலர் காட்டுகின்றது. ஜப்பான் படத்தை இயக்குனர் ராஜமுருகன் இயக்கியுள்ளார். பிரகாஷ் பாபு தயாரிப்பினை செய்துள்ளார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் கிளவராகக் கதையைத் தேர்வு செய்வதில் சிறப்புமிக்க வல்லவராகக் கார்த்தி இருக்கின்றார்.
ஜப்பான் படம் காமெடி கலந்த திரில்லர் கிரைம் சப்ஜெக்ட்டாக இருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியுள்ளது. கார்த்தி முக்கியமான ஜப்பான என்னும் கொள்ளையன் கதாபாத்திரத்தைக் கையாள்கிறார். அவர் அணிந்திருக்கும் கெட்டப்புகள் அவரின் நூதனமான கொள்ளையன் என்பதை காட்டுகின்றது.
200 ரூபாய் கோடி கொள்ளையடித்தல், தீவுகளில் பதுங்குதல் அவரைப் பிடிக்க 182 வழக்குகள் என டீசர் தெரிக்கவிடுகின்றது. எத்தனை குண்டுகள் போட்டாலும் ஜப்பானை ஒன்னும் அழிக்காது என்ற டயலாக்கு நச்சுன்னு இருக்கின்றது. சத்தம் இல்லாமல் சாதிப்பதில் கார்த்திக் வல்லவர் என்றே சொல்ல வேண்டும். ஜப்பான் படத்தில் அனு இம்மானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர், பாவா செல்லதுரை ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். கார்த்திகுடன் ஜிவி இணையும் ஐந்தாவது படம் ஆகும்.
ரவிவர்மன் இந்தப் படத்திற்கு சினிமா ஆட்டோகிராபி செய்கின்றார். இந்த வருடம் தீபாவளிக்கு ஜப்பான் நமக்கு ஒரு சிறப்பு வாய்ந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று டீசர் சக்கைபோடு போட்டுக் காட்டுகின்றது. ஜப்பான் படம் தெலுங்கு, மலையாளம், கன்னடா ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகின்றது. காமெடி திரில்லர் படமாக இருப்பதால் அனைத்து மொழி மக்களும் இப்படத்தினை தீபாவளிக்கு பார்த்து மகிழலாம்
தமிழ் சினிமாவில் கார்த்தி துணை இயக்குனராகப் பணியாற்றிப் பின்பு பருத்திவீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி இன்று வரை அவர் சினிமாவில் ஜொலிக்கிறார்.
பைய்யா, சிறுத்தையெனப் பல்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். குடும்ப பங்கான படங்கள் முதல் கிரைம் திரில்லர் காமெடி படங்கள்வரை அனைத்திலும் சிறப்பாகத் தனது கதாபாத்திரத்தை வெளிப்படுத்துபவர் ஆவார். வந்திய தேவனாகப் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஜப்பான் படத்தில் அவருடைய நடிப்பு டயலாக் டெலிவரி முக்கிய பெயரினை பெற்றுத்தரும். இவரின் தேர்ந்த நடிப்பை ஜப்பான் படத்திலும் பார்க்க முடியும் என்பதை டீசர் பட்டாசாக வெடித்து காட்டுகின்றது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com