இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் ட்ராமா மிஸ்டரி படமாக ஜப்பான் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துயிருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஜப்பான் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. நகைக்கடையில் வித்தியாசமான முறையில் கொள்ளையடித்துவிட்டு தப்பித்துக்கொண்டே இருக்கும் ஹீரோவை எப்படி போலீஸ் பிடிக்கின்றனர் என்பதே படத்தின் கதை. ஜப்பான் திரைப்படம் நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த பதிவும் உதவலாம் : சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே! ஜெயிலர் பட நடிகை மிர்னா மேனனின் ரசிக்க வைக்கும் படங்கள்..
இந்நிலையில் ஜப்பான் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 10 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு காட்சிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com