herzindagi
image

Diwali 2025: நாள் முழுவதும் இல்லை; 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கணும் - தமிழக அரசு

தீபாவளிக்கு நாள் முழுவதும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்றும்,  அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தீபாவளி கொண்டாட்டத்திற்கானப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Editorial
Updated:- 2025-10-15, 00:15 IST

தீபாவளி என்றாலே குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி பட்டாசுகள் தான் சட்டென்று அனைவருக்கும் நினைவுக்கு வரும். இன்றைய சூழலில் புத்தாடைகளை நினைத்த நேரத்தில் எல்லாம் வாங்கி உடுத்தி மகிழ்கின்றோம். ஆனால் தீப ஒளி திருநாளான தீபாவளியில் மட்டுமே விதவிதமான பட்டாசுகளைக் குடும்பத்தோடு வெடித்து மகிழ்வோம். அதற்கேற்றால் போல் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் விதவிதமான பட்டாசுகளும் ஒவ்வொரு ஆண்டும் சந்தையில் விற்பனையாகி வருகிறது.

மேலும் படிக்க: தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கும் போது கட்டாயம் இந்த விஷயங்களைப் பின்பற்றுங்கள்!

அதிக சத்தத்துடன், அதிக புகையுடனும் பட்டாசுகள் வெடிக்கும் போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக அதிக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றம் தீபாவளி திருநாளில் பட்டாசுகளை வெடிக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன் படி நாள் முழுவதும் கேட்ட வெடி சத்தம் குறைந்து விட்டது. ஆம் பட்டாசுகளை வெடிப்பதற்கான நேரத்தை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. அதன்டிப, கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தமிழக அரசு பட்டாசுகள் வெடிக்கும் நேரத்தை அறிவித்துள்ளது. தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் அதே போல இரவு நேரத்தில் 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தீபாவளித் திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகளை வெடித்து அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம். அதே சமயம் பட்டாசுகளை வெடிப்பதால் நிலம், நீர், காற்று போன்ற இயற்கை வளங்கள் பாதிக்கப்படும் எனவும், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதான முதியவர்கள் மனதளவிலும் உடலளவிலும் பாதிப்பை சந்திப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முடிந்தவரை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு குறிப்பிட்ட சில மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: Diwali 2025: பட்ஜெட்டிற்கு ஏற்ப தீபாவளிக்கு புத்தாடைகளும், பட்டாசுகளும் வாங்கணுமா? இதைப் பின்பற்றுங்க போதும்!

 

 

 

எனவே பாதுகாப்புடன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாட முயற்சி செய்யுங்கள். நிச்சயம் மகிழ்ச்சியுடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதோடு மட்டுமின்றி பட்டாசுகளை வெடிக்கும் போது எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். எப்போது பட்டாசுகள் வெடித்தாலும் கால்களில் காலணிகள் மற்றும் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. இதன் மூலம் பட்டாசு விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுபதைத் தவிர்க்க முடியும்.

Image source - Twitter

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com