herzindagi
image

மாடித்தோட்டம் அமைக்க தமிழக அரசு வழங்கும் கிட்; மானிய விலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை!

மாடித்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் உள்ள பெண்களை ஊக்கும் வகையில் தமிழக அரசு மானிய விலையில் அதற்குத் தேவையான பொருட்களை வழங்கி வருகிறது.
Editorial
Updated:- 2025-09-10, 16:48 IST

இன்றைக்கு எந்த உணவுப்பொருட்களை எடுத்தாலும் அதில் கட்டாயம் கலப்படம் இல்லாமல் இருக்காது. காய்கறிகளிலும் செயற்கை உரங்கள் போட்டு நச்சுத்தன்மையுடன் விற்பனைக்கு வருகிறது. இதற்கு மாற்றாக என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துத் தான் பெரும்பாலான வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பதில் பெண்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். வீட்டில் அருகாமையில் இடம் இல்லாமல் இருந்தாலும் நிச்சயம் மாடியில் 10க்கு 10 அடி இடம் கட்டாயம் இருக்கும்.

இந்த இடத்தைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் ஆர்வம் இருக்கிறதா? ஆனால் எப்படி செய்ய வேண்டும் என்ற குழப்பம் இருக்கிறதா? கவலை வேண்டாம் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் மாடித்தோட்டம் அமைப்பதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் மானிய விலையில் விற்கிறது. நேரில் சென்றும் ஆன்லைன் வாயிலாகவும் விண்ணப்பிக்க முடியும். எப்படி என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம். வாருங்கள்.

மேலும் படிக்க: வீட்டிலேயே கீரை வளர்க்க ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்


இந்த திட்டத்தின் கீழ், மாடித் தோட்டம் தொகுப்பு மற்றும் மூலிகை தோட்டம் தொகுப்பு என இரண்டு வகைத் தொகுப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. மாடித் தோட்டம் தொகுப்பில் காய்கறி வளர்ப்பதற்கான விதைகள் மற்றும் தேவையான உபகரணங்கள் இடம் பெற்றுள்ளன; மூலிகை தொகுப்பில் மருத்துவ பயனுள்ள மூலிகை செடிகள் வளர்க்க தேவையான பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் மாடித் தோட்டம் மற்றும் மூலிகைத் தோட்டம் அமைப்பதற்குத் தேவையான பொருட்களை வழங்கப்படுகிறது. ஒரு நபர் தன்னுடைய ஆதார் எண்ணைபை் பயன்படுத்தி இரண்டு தொகுப்புகளுக்கும் விண்ணப்பிக்க முடியும். https://tnhorticulture.tn.gov.in/  என்ற இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க: வீட்டுத் தோட்டத்தில் குங்குமப்பூ வளர்ப்பு: சிறிய இடம் இருந்தால் போதும்; இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க


ஒருவேளை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க முடியவில்லை என்றால், உங்கள் அருகாமையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். அப்படி செல்லும் போது சமீபத்திய புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

மாடித் தோட்டம் அமைக்க வழங்கும் பொருட்கள்:

  • வளர்ப்பு பைகள் - 6
  • தென்னை நார் கழிவு- 12 கிலோ
  • காய்கறி விதைகள் - 6 வகைகள்
  • அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா - 200 கிராம்
  • வேப்ப எண்ணெய் மற்றும் பூச்சி கொல்லி - 100 மில்லி லிட்டர்
  • மாடித்தோட்டம் அமைக்கும் கையோடு - 1

மேற்கூறியுள்ள பொருட்கள் அனைத்தும் ரூ. 900. இதை அனைத்தையும் அரசு மானிய விலையில் ரூ. 450க்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source - Free

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com