image

ஹாலிவுட்டில் களமிறங்கும் யோகிபாபு; படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் யோகி பாபு தற்போது ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2024-11-28, 00:06 IST

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு. இவர் 2009 ஆம் ஆண்டு அமீர் நடிப்பில் வெளியான யோகி படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதற்குப் பிறகு இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, சூர்யா, கார்த்தி, ஜி வி பிரகாஷ் என்று தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் திரைப்படங்களில் நடித்து விட்டார். முதலில் தனது திரை பயணத்தை நகைச்சுவை நடிகராக துவங்கிய யோகி பாபு சமீப காலமாக தமிழ் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

குறிப்பாக நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் துவங்கி 2019 ஆம் ஆண்டு வெளியான கூர்கா, முத்துக்குமரன் இயக்கத்தில் தர்ம பிரபு, வாட்ச்மேன், காக்டெய்ல், பேய் மாமா , போட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான மண்டேலா திரைப்படம் நடிகர் யோகி பாபுவின் திரைப்பயணத்தில் எதிர்பாராத அளவு திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் யோகி பாபு பல மொழி திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார்.

maxresdefault (26)

தமிழ் சினிமாவில் கால்ஷீட் கிடைக்க இயக்குனர்கள் லைனில் நிற்கும் ஒரு நடிகராக யோகி பாபு மாறிவிட்டார் என்று தான் கூற வேண்டும். சினிமா துறையில் அவரின் அசுர வளர்ச்சியை கண்டு பலரும் வியக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் யோகி பாபு தற்போது ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

thequint_2018-08_3adbed9a-1fd2-451c-822f-3c1a334f658f_23c00c18_2594_4ed5_8fff_613438955442

ஹாலிவுட்டில் யோகி பாபு:



நடிகர் யோகி பாபு மற்றும் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜீவி பிரகாஷ் டிராப் சிட்டி என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் நடிகர்களாக அறிமுகமாக உள்ளனர், திருச்சியை சேர்ந்த இயக்குனர் டெல். கே கணேஷ் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான டெவில்ஸ் நைட் படத்தை தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் மூலம் நடிகர் நெப்போலியன் ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இந்த நிலையில் இயக்குனர் டெல். கே கணேஷ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ட்ராப் சிட்டி. இந்த திரைப்படத்தில் ஜாக்சன், நெப்போலியன், ஜிவி பிரகாஷ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த ட்ராப் சிட்டி திரைப்படத்தின் மூலம் யோகி பாபுவும் ஜிவி பிரகாஷும் ஹாலிவுட் நடிகர்களாக களம் இறங்குகின்றனர்.

23593012-1a

இசைத்துறையில் வெற்றி பெற போராடும் ஒரு சாதாரண இசைக்கலைஞனின் போராட்டத்தை கதை களமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். சமீபத்தில் ட்ராப் சிட்டி திரைப்படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் ட்ராப் சிட்டி திரைப்படம் டிசம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் ஹாலிவுட்டுக்கு நடிக்க சென்ற யோகி பாபுவுக்கு தனது ரசிகர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com