இளம் வயதிலே மரணமடைந்த தமிழ் நடிகைகள்

தமிழ் சினிமாவில் பேரும் புகழும் இருக்கும் போதே பல காரணங்களால் இளம் வயதிலேயே மரணமடைந்த தமிழ் நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்க போகிறோம். இந்த நடிகைகளின் இறப்பு இன்று வரை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. 

silk smitha death

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட நடிகைகள் அறிமுகமாகி புகழின் உச்சத்துக்கு சென்றுளனர். ஒருசிலர் அப்படியே தலைகீழ். ஒரு படத்திலேயே காணாமல் போய் விடுவார்கள். இது தமிழ் சினிமாவில் மட்டுமில்லை தென்னிந்திய சினிமாவில் நடக்கும் பொதுவான விஷயம். வாய்ப்பு இல்லாமல் அல்லது நடிப்பதில் விருப்பமில்லை செல்வது வேற கதை.

ஆனால் பீக்கில் இருக்கும்போதே மரணத்தால் அவர்களின் கெரியர் முடிவுக்கு வருவது வேதனையிலும் வேதனை. இந்த அதிர்ச்சியை ரசிகர்கள், சக சினிமா கலைஞர்கள், அவர்களின் குடும்பத்தார் என அனைவரும் ஏற்க முடியாமல் இன்று வரை தவித்து வருகின்றனர். ஒருவேளை அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் இன்னும் பல சாதனைகளை செய்திருப்பார்களோ எனவும் மனம் யோசிக்க வைக்கிறது.

அந்த வகையில் இந்த பதிவில் இளம் வயதில் மரணமடைந்த தமிழ் நடிகைகள் குறித்து பார்க்க போகிறோம்.

சில்க் ஸ்மித்தா

இன்றுவரை இவரின் வெற்றிடத்தை நிரப்ப தமிழ் சினிமாவில் ஆள் இல்லை என்பதே நிதர்சனம். ஆந்திராவில் பிறந்த விஜயலட்சுமி தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மித்தாவாக என்ட்ரி கொடுத்தார். கவர்ச்சி நடிகையாக குறிப்பிடப்பட்டாலும் சில்க் ஸ்மித்தா ஆக சிறந்த நடிகை என்பதை யாராலும் மறுக்க முடியாது. டான்ஸ், நடிப்பு என ஆல் ரவுண்டர் சில்க் ஸ்மித்தா கடந்த 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் அறிவித்தன்ர். இது கொலையா? தற்கொலையா? என்பது இதுவரை வெளிவராத உண்மை.

actress simran sister death

சவுந்தர்யா

கர்நாடகாவை சேர்ந்த சவுந்தர்யாவை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத் குமார், சீரஞ்சீவி, வெங்கடேஷ், மோகன்லால், மம்மூட்டி என அனைத்து தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்தவர். கிட்டத்தட்ட 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சவுந்தர்யா இறக்கும் போது 2 மாதம் கர்ப்பம் எனவும் சொல்லப்படுகிறது. 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி விமான விபத்தில் சவுந்தயா உயிரிழந்தார்.

நடிகை மோனல்

நடிகை சிம்ரன் தங்கை மோனல் விஜய்யின் பத்ரி, பார்வை ஒன்றே போதும் போன்ற படங்களில் நடித்தார்.கடந்த 2002 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மோனலின் மரணம் சிம்ரனை பேரதிர்ச்சியில் தள்ளியது. இன்று வரை அந்த இழப்பில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவிக்கிறார் நடிகை சிம்ரன்.

இந்த பதிவும் உதவலாம்:செம்ம கியூட்! தமிழ் நடிகைகளின் குழந்தை பருவ புகைப்படங்கள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP