herzindagi
image

சுருதி நாராயணனின் 2வது வீடியோ : தப்பை சுட்டிக்காட்டி கொந்தளித்த சனம் ஷெட்டி

சுருதி நாராயணின் casting couch வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர் மீதும் தவறு இருப்பதாக பிக்பாஸ் போட்டியாளர் சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார். சுருதி நாராயணின் வீடியோ AI பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக இருந்தால் அவர் புகாரளித்து குற்றவாளிகளை வெளிச்சமிட்டு காட்டவும் அறிவுறுத்தியுள்ளார்.
Editorial
Updated:- 2025-04-01, 19:05 IST

சமீப நாட்களாக இன்ஸ்டாகிராம், முகநூல், எக்ஸ், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் தீப் பிழம்பாக வெடித்த விஷயம் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சுருதி நாராயணின் ஆபாச வீடியோ. முதலில் வெளியான 14 நிமிட வீடியோ குறித்து சுருதி நாராயணன் இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளிக்கும் முன்பே 22 நிமிட மற்றொரு ஆபாச வீடியோ வெளியானது. படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தருவதாக சுருதி நாராயணனை பாலியல் இச்சைக்கு இணங்க வைத்துள்ளது ஒரு கும்பல். இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர் சனம் ஷெட்டி சுருதி நாராயணன் மீதும் தவறு இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். 

சுருதி வீடியோவை பரப்பாதீங்க - சனம் ஷெட்டி 

சுருதி நாராயணனின் ஆபாச வீடியோ தொடர்பாக சனம் ஷெட்டி யூடியூப் சேனனில் 11 நிமிட வீடியோ வெளியிட்டுள்ளார். சுருதி நாராயணின் லீக் ஆன ஆடிஷன் வீடியோ உங்களிடம் இருந்தால் தயவு செய்து அதை ஷேர் செய்யாமல் டெலீட் செய்துவிடுங்கள். காமவெறியுடன் அந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு காமம் வராது; பரிதாபம் தான் வரும். திரையுலகில் வாய்ப்பிற்காக பாலியல் இச்சைக்கு இணங்குவது பண பரிமாற்றம் போன்றது. அதற்காக வீடியோ காலில் என்ன சொன்னாலும் செய்ய வேண்டும். அந்த வீடியோ எடுத்தவனை எந்த கெட்ட வார்த்தை வேண்டுமானாலும் பயன்படுத்தி திட்டி விடலாம். 

ஆடிசனில் எதையும் கேட்கலாமா ? சனம் ஷெட்டி 

பெரிய இயக்குநரின் மேனேஜர் என்று சொல்லி எவ்வளவு மோசமான செயல்களை செய்ய வைக்க முடியுமோ அனைத்தையும் செய்ய வைத்திருக்கின்றான். இந்த பெண்ணும் சிரித்த முகத்தோடு அதை செய்கிறார். இதை பார்க்கும் போது மனதில் ஒரு கேள்வி எழுகிறது ? ஆடிசன் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் கேட்பீர்களா ? மானங்கெட்ட வழியில் படம் எடுத்து பெண்களின் சாபத்திற்கு ஆளாகிறீர்கள்.

மேலும் படிங்க  AI வீடியோவை நம்பாதீங்க சுருதி நாராயணன் இன்ஸ்டாவில் வைத்த வேண்டுகோள்

திறமைக்கு வாய்ப்பு கொடுங்க - சனம் ஷெட்டி

நீங்கள் எல்லாம் நல்லா இருப்பீங்களா ? ஒரு புறம் நெப்போடிசம். திரை நட்சத்திரங்களின் வாரிசுகளுக்கு கிடைக்கும் தொடர்பு, வாய்ப்புகள் எங்களுக்கு கிடைப்பதில்லை. பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்ததால் நான் உட்பட பல நடிகைகள் சினிமா வாய்ப்பை இழந்துள்ளோம். எங்களுடைய கனவுகளை கொன்றுவிட்டோம். தப்பு செய்யாமல் இருப்பதே தப்பாக மாறிவிடுகிறது. வாய்ப்பு வழங்குவதாக ஆசைக்கு இணங்குமாறு கேட்கும் நபர்களிடமும் அதற்கு இணங்கும் நபர்களிடமும் தவறு இருக்கிறது.

பாதுகாப்பு தேவை - சனம் ஷெட்டி

அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்றால் அவர் புகாரளித்து நியாயம் பெற வேண்டும். தமிழ் சினிமாவின் பெரிய மனிதர்களிடம் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். திரைத்துறை மோசமாகிவிட்டது. எனவே சுத்தம் செய்யும் நடவடிக்கையை எடுங்கள். திரைத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பை உருவாக்கவும். சரிசமமாக நடத்தி திறமைக்கு ஏற்ப நியாயமான வாய்ப்புகளை கொடுக்கவும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com