
கடந்த நான்கு நாட்களாக இணையத்தில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் சுருதி நாராயணனின் ஆபாச வீடியோ வைரலாகி வருகிறது. பட வாய்ப்பு தருவாக கூறி சுருதி நாராயணனை ஒரு கும்பல் பாலியல் இச்சைக்கு இணங்க வைப்பது போல 14 நிமிட ஆபாச காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோ வைரலாக தொடங்கிய முதல் சில நாட்களுக்கு சுருதி நாராயணன் தன் இன்ஸ்டா பக்கத்தை பிரைவேட் ஆக மாற்றியிருந்தார். இந்த நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் பகிர்ந்து தனது பெயரில் பரவி வரும் ஆபாச வீடியோ செய்ற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என சுருதி நாராயணன் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
சுருதி நாராயணன் பகிர்ந்துள்ள ரீல்ஸில் ஒரு பெண் செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தன்னை போலவே ஒரு போலியை உருவாக்கி பேசவும் வைக்கிறார். இதை எப்படி உருவாக்கினேன் என்ற விளக்கத்தையும் கொடுக்கிறார். குறிப்பிட்ட AI தொழில்நுட்பத்தில் முதலில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுகிறார். செயற்கை நுண்ணறிவானது அப்பெண்ணின் உடல் அமைப்பையும், அசைவுகளையும் கச்சிதமாக பதிவேற்றம் செய்து கொள்கிறது. அதன் பிறகு தனது பேச்சுகளையும், குரல் வளத்தையும் பதிவிடுகிறார் அப்பெண். மூன்றாவதாக AI உருவாக்கிய பெண் பேசுவதற்கு சில தரவுகளையும் கொடுக்கிறார். இதையடுத்து ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய் கண்ணோடு காண்பதெல்லாம் பாடலுக்கு இரட்டை வேடத்தில் ஆடுவது போல் நிஜப் பெண்ணும், AI உருவாக்கிய பெண்ணும் ஒரே வீடியோவில் அருகருகே அமர்ந்து பேசுகின்றனர். இந்த வீடியோவை போலவே தனது புகைப்படங்களை பயன்படுத்தி ஆபாச வீடியோ உருவாக்கப்பட்டு இருப்பதாக சிறகடிக்க ஆசை நடிகை சுருதி நாராயணன் குறிப்பிடுகிறார்.
மேலும் படிங்க சுருதி நாராயணின் அவசரக்குடுக்கை செயலால் ஏற்பட்ட வினை; பட வாய்ப்பு தருவதாக வலைவீசும் கும்பல்
சுருதி நாராயணன் அந்த வீடியோவை AI எனக் குறிப்பிட்டாலும் சிறகடிக்க ஆசை சீரியல் பார்பவர்களுக்கு சில சந்தேகங்கள் எழுகின்றன. சீரியலில் சுருதி நாராயணனுக்கு டப்பிங் குரல் பயன்படுத்தப்படுகிறது. ஆபாச வீடியோவில் வரும் குரலும், நேர்காணலில் சுருதி நாராயணனின் குரலும் ஒன்றாக இருக்கிறது. அப்படியென்றால் தனது குரலை தவறுதலாக யாரோ சேகரிக்கிறார்கள் என சுருதி நாராயணனுக்கு தெரியாமல் போனது எப்படி ? AI-ல் உடல் அமைப்பு, அசைவுகளை பகிர்ந்தாலும் ஒரு சில செயல்களை மட்டுமே தத்ரூபமாக உருவாக்க முடியும். அந்த ஆபாச வீடியோவில் வீட்டிற்குள் அமர்ந்தபடி சுருதி நாராயணன் வீடியோ காலில் பேசுவது, நடந்து செல்வது, வீட்டின் சுவற்றில் ஒட்டியிருக்கும் சினிமா போஸ்டர்கள் தெரிகின்றன. அந்த அளவிற்கு தத்ரூபமாக வீடியோ உருவாக்க முடியுமா ? அதே போல கையில் அணிந்திருக்கும் மோதிரம் தெளிவாக தெரிகிறது. இவை அனைத்துமே AI பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் சுருதி நாராயணன் முறைப்படி காவல்நிலையத்தில் வீடியோவை நீக்கவும், மோசமான செயலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய புகாரளித்தாரா என்ற கேள்வியும் எழுகிறது. புகார் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com