விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான கொள்கைத் திருவிழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் தவெக தோழர்களுக்கு கட்சியின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் எடுத்துரைத்தார். சுமார் 45 நிமிடங்கள் பேசிய விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கொள்கைகள், கோட்பாடுகள், அரசியல் பாதை, எதிரிகள், செயல் திட்டங்கள் குறித்து விவரித்தார். ஒரு குழந்தை முதல் முதலாக அம்மா என்று அழைக்கும் போது ஏற்படும் சிலிர்ப்பு தனக்கு ஏற்படுவதாக உரையை ஆரம்பித்தார்.
பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் - விஜய்
நாம் வெறுப்பு அரசியலை கையில் எடுக்கப்போவதில்லை; செயல் தான் முக்கியம்; அரசியல் களத்தில் நெருப்பாக இருக்க போகிறோம்; நான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்பது சுயநலம்; வாழ்க்கை கொடுத்த மக்களுக்கு எதாவது திருப்பி செய்ய வேண்டும், விஸ்வாசத்தை காண்பிக்க விடை தேடி அரசியல் பாதையை தேர்ந்தெடுத்தேன். இங்கு இறங்கி அடிச்சா தான் நல்லது செய்ய முடியும்; யோசித்து நிதானமாக அடியெடுத்து வைக்க வேண்டும்.
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் - தவெக விஜய்
எல்லாருக்கும் எல்லாம், பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தில் அரசியல் நிலைப்பாடு; சம தர்ம கொள்கை என்று சொன்னவுடனேயே கதறல் இன்னும் அதிகமாக கேட்கும்; எதிரிகள் இன்றி அரசியல் களம் இருக்காது; மதம், சாதி, பாலினம், மொழி ஆகியவற்றை வைத்து அரசியல் செய்வது மட்டும் பிளவுவாதம் மட்டும் நமக்கு எதிரியல்ல ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்ப்போம்; பிளவுவாத அரசியல் செய்வோரை கூட கண்டுபிடித்து விடலாம்; ஊழல் எங்கு ஒளிந்திருக்கும் என கண்டுபிடிக்க முடியாது; கலாச்சார பாதுகாப்பு வேஷம் போட்டு கரப்ஷன் கபடதாரிகள் ஆட்சி செஞ்சிட்டு இருக்காங்க என விஜய் தடாலடியாக பேசினார்.
மக்களுக்கான அரசியல் பாதை - விஜய்
தவெக- வின் பாதை மக்களுக்கான மகத்தான அரசியல் பாதையாக நிரந்தரமாக இருக்கும்; உதார் விடும் திட்டங்கள் தேவையில்லை; ஒவ்வொரு திட்டமும் மக்களிடம் சென்று சேர்ந்ததா என பார்க்க வேண்டும்; மீன் பிடித்து வாழ சொல்லிக் கொடுப்பதோடு நாமே மீன்பிடித்து கொடுத்து பிறரை வாழ வைப்போம்; மாற்று சக்தி, மாற்று அரசியல் பேசி பத்தோடு பதினொன்றாக வரப்போவதில்லை; எக்ஸ்டரா சுமையாகவும் வரவில்லை; ஏமாற்று சக்திகளிடம் இருந்து தமிழக மக்களை விடுவிக்க மகனாக, தம்பியாக, அண்ணனாக உங்களுக்காக உழைப்பேன்.
சினிமாவுக்கு நோ - விஜய்
அரசியலுக்கு ஒரு முடிவோட வந்திருக்கேன்; திரும்பி போக மாட்டேன்; இங்கு கூடியிருக்கும் மாபெரும் சக்தியோடு சேர்ந்து எடுத்த முடிவு. கொள்ளையடிக்க வந்த கூட்டமில்லை; சோஷியல் மீடியாவில் கம்பு சுத்தம் கூட்டமில்லை; பணத்திற்காக கூடிய கூட்டமல்லை இது மக்களுக்காக கூடிய என்றார் விஜய். பயாஸ்கோப் காட்டுவது, ஏ டீம், பி டீம் எனக் கூறுவது எல்லாம் அல்லு சில்லு வேலை;
Tamilaga Vettri Kazhagam: Ideology Song | தமிழக வெற்றிக் கழகம்: கொள்கைப் பாடல்https://t.co/WOaifpxHSd#TVKIdeologySong #ThalaivarVijay #VettriKolgaiThiruvizha
— TVK Vijay (@tvkvijayhq) October 27, 2024
புதியதோர் விதி ஒன்றை
புதுமையாய் நாம் செய்வோம்!
வெற்றி நிச்சயம். pic.twitter.com/tpdogTIRoV
2026 தேர்தலே இலக்கு - விஜய்
தமிழக வளர்ச்சி, நலனுக்காக ஏக்கத்தில் காத்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பமாக ஜனநாயக போர்க்களம் எனும் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை; சிறுபான்மை, பெரும்பான்மை பேசுற அவங்க பாசிசம் நா நீங்க பாயசமா ? நீங்களும் மக்கள் விரோத ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி செய்றீங்க; பூச்சாண்டி காட்டும் மோடி மஸ்தான் வேலை எல்லாம் எடுபடபோவதில்லை; நாட்டுக்கு எதிராக செயல்படுவோர் மற்றும் தமிழகத்தை குடும்ப சுயநலத்திற்காக பயன்படுத்தும் கூட்டமே தமிழக வெற்றிக் கழகத்தின் எதிரிகள் எனக் குறிப்பிட்டார் விஜய்.
மேலும் படிங்க"போருக்கு போன சின்ன பையன்" தவெக மாநாட்டில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி
குட்டீஸ் டூ பாட்டீஸ் ஆளாக இருப்பேன் - விஜய்
உங்க அண்ணனாக, உங்க தம்பியாக, உங்க தோழன் விஜய் வந்திருக்கேன்; சாதாரண விஜய் நடிகன் விஜயாக மாறினான் பிறகு வெற்றி பெற்ற நடிகராக மாறினான்; பொறுப்புள்ள மனுஷன், தலைவான வந்திருக்கிறேன்; என்னுடைய பொறுப்பை தீர்மானிக்கப் போவது நீங்கள்; உண்மையாக ஓய்வு இல்லாமல் உழைப்பேன்; ரிசல்ட் உங்கள் கைகளில் என பேசினார் விஜய்.
பிரபலங்கள் தொடர்பான விஷயங்களை உடனுக்கு உடன் தெரிந்துகொள்ள ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation