herzindagi
Thunivu Actor Ajith

வசமாக சிக்கிய போஸ் வெங்கட் ! வச்சு செய்த அஜித் ரசிகர்கள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஜித் என்ன செய்தார் என கேள்வி எழுப்பிய போஸ் வெங்கட்டிற்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர் 
Editorial
Updated:- 2023-12-12, 21:51 IST

இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது அரசாங்கத்தையும் மீறி பெரும் பணக்காரர்கள், தன்னார்வலர்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே பொதுமக்களால் இயல்பு வாழ்க்கைக்கு எளிதில் திரும்ப முடியும். ஆனால் இம்முறை மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஏற்படுத்திய பாதிப்பு மக்களைத் மீளாத் துயரில் தள்ளி இருக்கிறது.

2015ல் இதே போன்று வெள்ளம் ஏற்பட்டது போல நடிகர்கள் பலரும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்தனர். இம்முறை விரல் விட்டு எண்ணும் அளவிலேயே நடிகர்களை காணமுடிகிறது. இந்த நிலையில் நடிகரும், ஆட்சி செய்யும் கட்சியின் தீவிர ஆதரவாளருமான போஸ் வெங்கட் தேவையின்றி அஜித்தை வம்பு இழுத்து வசமாகச் சிக்கி கொண்டார்.

இதன் ஆரம்பப் புள்ளி நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ட்வீட் தான். ஒரு பொதுவான நண்பர் மூலம் எங்கள் நிலைமையை அறிந்த பிறகு, அஜித் சார் நேரடியாக எங்களைப் பார்க்க வந்து வில்லாவில் உள்ள மக்களுக்கு பயண ஏற்பாடுகளைச் செய்து உதவியதாகக் கூறி நன்றி தெரிவித்தார்.

ajith with jwala gutta

மேலும் படிங்க 5,000 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய கமல்

அப்போது அமீர் கானும் அஜித்தும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. இது பற்றி பதிவிட்ட நடிகர் போஸ் வெங்கட் டிக்கெட் எடுத்து உங்களைப் பார்க்கும் ஏழையின் குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை. (ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்கலாம்) என நேரடியாகச் சாடியிருந்தார்.

பதிவில் தமிழ் வார்த்தைகள் தப்பு தப்பாக எழுதப்பட்டு இருந்தன. இதையடுத்து போஸ் வெங்கட்டிற்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுக்கத் தொடங்கினர். அஜித் செய்யும் உதவிகள் செய்திகளில் வராவிட்டாலும் அவர் பலருக்கு மறைமுகமாகச் செய்யும் உதவிகளை பற்றி சக நடிகர்கள் கிடைக்கும் வாய்ப்புகளில் கூறுவதுண்டு.

ajith with a doctor

அஜித் செய்த உதவிகளை ரசிகர்கள் ஒவ்வொன்றாகப் பட்டியலிட, துணிவு படத்தில் வில்லனாக நடித்த ஜான் ஹோக்கன் தனது பங்கிற்கு எது செய்தாலும் குறை கூறும் மனிதர்கள் உண்டு அதைப் பற்றிக் கவலைப்படாமல் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் புகைப்படத்தை மேற்கொள்காட்டி வாழு வாழவிடு என பதிவிட்டார்.

மேலும் படிங்க "இயன்றதை செய்வோம்" மாதர் பிரச்சினைக்கு உதவிய நடிகர் பார்த்திபன்

இத்துடன் பிரச்சனையும் முடிந்துவிட்டது. இதைத் துளியும் பொருட்படுத்தாமல் அஜித் விடாமுயற்சி படத்திற்காக அஜர்பைஜான் பறந்து விட்டார். மறுநாள் வேறொரு விஷயம் தொடர்பாகப் பதிவிட்ட போஸ் வெங்கட், அதிலும் தமிழை தப்பு தப்பாக எழுதியிருந்தார். எனவே முதலில் தமிழை ஒழுங்காகக் கற்றுக் கொள்ளுங்கள் என போஸ் வெங்கட்டிற்கு அஜித் ரசிகர்கள் அறிவுரை கூறியுள்ளனர். 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com