herzindagi
national awards list

National Awards 2023 : தேசிய விருதை வென்ற நடிகர், நடிகைகள் யார் தெரியுமா ? முழு லிஸ்ட் இதோ..

69 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த படம் ஆகிய பிரவுகளில் வெற்றிப்பெற்றவர்களின் தகவல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-08-25, 17:02 IST

கடைசி விவசாயி 

இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு கடைசி விவசாயி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் மாயாண்டி என்ற வயதான கதாபாத்திரத்தில் நல்லாண்டி என்பவர் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியான போது திரையரங்குகளுக்கு சென்று மக்கள் அதிகளவில் பார்க்கவில்லை என்பது குறித்து பல இயக்குனர்கள் மேடையில் பேசினார்கள். ’கடைசி விவசாயி’படம் கொண்டாட வேண்டிய படம் என ஹெச்.வினோத் உள்ளிட்ட பல இயக்குனர்கள் கூறினார்கள். இந்நிலையில் கடைசி விவசாயி திரைப்படம் 2 பிரிவுகளை தேசிய விருதை வென்றிருக்கிறது. சிறப்பு பிரிவில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்த நல்லண்டிக்கும், சிறந்த தமிழ் படத்துக்கான விருது கடைசி விவசாயி படத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராக்கெட்ரி

நடிகர் மாதவன் இயக்கி நடித்த  ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் அமேசா பிரைம் ஓடிடி தளத்தில் இருக்கிறது. இந்த படம் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இதில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்திருந்தார். நடிகர் சிம்ரன் ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழில் நடிகர் சூர்யா சிறப்பு கதாபாத்திரத்திலும், ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.இந்த திரைப்படம் சிறந்த திரைப்பட பிரிவில் தேசிவ விருதை வென்றிருக்கிறது.இதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

rocketry

ஸ்ரேயா கோஷல்

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் , ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இரவில் நிழல் படம் வெளியானது. இந்த படம் இந்திய சினிமாவின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் ஃபிலிம் என்ற பெருமையை பெற்றது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடிய ’மாயவா தூயவா’ என்ற பாடலுக்கு சிறந்த பாடகிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரேயா கோஷல் தமிழில் பல பாடல்களை பாடியிருக்கிறார். இதுவரை சிறந்த பாடகி பிரிவில் 5 தேசிய விருதுகளை ஸ்ரேயா கோஷல் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

shreya goshal

ஆவண படங்கள்

கருவறை என ஆவணப்படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படமில்லாத non-feature படங்களின் பிரிவில் ’சிற்பிகளின் சிற்பங்கள்’ படத்துக்கு சிறந்த கல்வி திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பி.லெனின் இயக்கியிருக்கிறார்.

 

பிற மொழி படங்கள்

ஆர்.ஆர்.ஆர்

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர்,ஆலியா பட் நடிப்பில் வெளியான ’ஆர்ஆர்ஆர்’ படம் சிறந்த பொழுதுபோக்கு படம், இசை , நடன, சண்டை , ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், பாடகர் என 6 பிரிவில் தேசிய விருதுகளை வென்றிருக்கிறது.

pushpa allu arjun

அல்லு அர்ஜுன்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் புஷ்பா திரைப்படம் வெளியானது.இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி 350 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி, ஓ சொல்றியா ஆகிய பாடல்கள் உலகளவில் ட்ரெண்ட் ஆனது. இந்த படத்தில் புஷ்பா ராஜ் என்ற கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் சிறப்பாக நடித்திருப்பார். இந்நிலையில் சிறந்த நடிக்கருக்கான தேசிய விருது நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அறிவிக்கப்படுள்ளது. இதை அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

gangubai

ஆலியா பட்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘கங்குபாய் கத்தியாவாடி’திரைப்படத்தில் கங்குபாய் கதாபாத்திரத்தில் நடிகை ஆலியா பட் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றிருக்கிறார் ஆலியா பட். இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com