இது என்ன மாயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் 15 வருடங்களாக ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வருவதாக திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. தமிழ் சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காத நடிகைகளே கிடையாது. 4-5 படங்களில் நடித்துவிட்டாலே அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கிசு கிசுக்கப்படும். தொடரி, ரஜினி முருகன், ரெமோ, பைரவா, பாம்பு சட்டை, தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, சர்கார், பென்குயின், அண்ணாத்த, மாமன்னன், சைரன், ரகு தாத்தா என பல படங்களில் நடித்திருந்தாலும் கீர்த்தி சுரேஷ் பற்றி கிசுகிசு பரவவில்லை. கவர்ச்சி காட்சிகளுக்கு இடம் கொடுக்காத நடிகையாகவும் கீர்த்தி சுரேஷ் வலம் வந்தார். இந்த நிலையில் திடீரென கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்ற தகவல் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் காதல்
கீர்த்தி சுரேஷின் காதலர் என கூறப்படும் ஆண்டனி தட்டிலுக்கு சினிமா பின்புலம் கிடையாது. தொழிலதிபரான இவர் கேரளா, துபாயில் வசிக்க கூடியவர். Asperos Windows என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப துபாயிலும், கேரள மாநிலம் கொச்சியிலும் பணி செய்கிறார். சமூகத்தில் தன்னை பெரிதும் காட்டிக் கொள்ள தயங்கும் ஆண்டனி தட்டில் கீர்த்தி சுரேஷுடன் பள்ளி பருவத்தில் இருந்தே பழகி வந்துள்ளார். கொச்சியில் இவர் கல்லூரி படிப்பு பயிலும் போது கீர்த்தி சுரேஷ் பள்ளியில் படித்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தங்களுடைய லட்சத்தியத்திற்காக காதலை ரகசியமாக வைத்துள்ளனர்.
கோவாவில் கீர்த்தி சுரேஷின் திருமணம்
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டிலின் திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. டிசம்பர் 11 மற்றும் 12ஆம் தேதி திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் இருவரின் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும், திரையுலக பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். இரு குடும்பத்தினரின் சம்மதத்தோடு பாரம்பரிய முறையில் திருமணம் நடைபெறவுள்ளது.
கீர்த்தி சுரேஷின் காதல் வாழ்க்கை
தொழிலில் இருவருக்கும் எவ்வித சிக்கல் ஏற்பட்டாலும் காதலில் இடையூறு இன்றி பயணித்துள்ளனர். ஆண்டனியின் எளிமையான குணம் கீர்த்தி சுரேஷை மிகவும் கவர்ந்துள்ளது. கீர்த்தி சுரேஷும் அவசரப்படாமல் திரையுலகில் குறிப்பிட்ட உயரத்தை அடைந்த பிறகு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். திரையுலக புகழ் கீர்த்தி சுரேஷை எப்போதும் பொதுமக்களின் பார்வையில் வைத்துள்ளது. எனினும் ஆண்டனி தட்டிலின் வாழ்க்கை ரகசிய கோப்பு போல இருந்துள்ளது. இந்த மாறுபாடும் அவர்களுடைய காதலுக்கு உதவியுள்ளது. காதல் உறவுக்கு இருவரும் வெவ்வேறு விதங்களில் வலு சேர்த்துள்ளனர்.
மேலும் படிங்க"தனுஷின் போலி முகமூடி" நெட்பிளிக்ஸ் விஷயத்தில் பொளந்து கட்டிய நயன்தாரா
இன்னும் 20 நாட்களே உள்ளதால் திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களும் இந்த அறிவிப்பால் கீர்த்தி சுரேஷின் திருமணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation