Actor Manikandan Exclusive: சினிமாவை விட்டு நான் போக நினைச்சாலும் சினிமா விடாது; குடும்பஸ்தன் பட அனுபவம் பகிரும் மணிகண்டன்

தரமான படங்களை கொடுக்கும் நடிகர் மணிகண்டன் இன்று தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மாறிவிட்டார் என்று கூட சொல்லலாம். அந்த வரிசையில் குடும்பஸ்தன் திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு நடிகர் மணிகண்டன் ஹெர் ஜிந்தகி தமிழ் குழுவுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
image

ஜெய் பீம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகர் தான் மணிகண்டன். இவர் ஜெய் பீம் படத்தில் அவரது நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இதற்கு பிறகு குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் என்று அவர் நடித்த மூன்று படங்களுமே ஹாட்ரிக் வெற்றி. இவர் நடித்த அணைத்து படங்களிலும் இவரது கதாபாத்திரம் நமக்கு ரொம்ப சீக்கிரம் கனெக்ட் ஆகி விடும். தரமான படங்களை கொடுக்கும் நடிகர் மணிகண்டன் இன்று தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மாறிவிட்டார் என்று கூட சொல்லலாம். அந்த வரிசையில் குடும்பஸ்தன் திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு நடிகர் மணிகண்டன் ஹெர் ஜிந்தகி தமிழ் குழுவுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

பேமிலி ட்ராமா படங்கள் என்றாலே போரிங் அப்படின்னு ஒரு எண்ணம் இருக்கும். ஆனால் குடும்பஸ்தன் மாதிரி ஒரு படம் ஸ்கிரிப்ட் நீங்க எப்படி தேர்ந்தெடுத்தீங்க?


என்ன பொறுத்த வரைக்கும் பேமிலி ட்ராமா படங்கள் போரிங் அப்டிலாம் இல்லை. இந்த மாதிரி எண்ணம் ஸ்ட்ராடஜி எல்லாத்துக்குமே இருக்குது தான். அது என்ன பொறுத்த வரைக்கும் டிஸ்கரேஜ் பண்ற மாதிரி வந்துகிட்டே தான் இருக்குது. நாம எல்லோரும் அதற்கான எக்ஸாம்பிள் பார்த்துக்கிட்டே தான் இருக்கோம். அதனால நான் அதை பெருசா நம்பறவன் இல்ல. அதுல என்ன உண்மை இருக்கு, இது மக்கள் கிட்ட சரியா போய் சேருமா அப்படின்னு மட்டும்தான் என்னோட எண்ணம் இருக்கும்.

நீங்க ஃபர்ஸ்ட் டைம் குடும்பஸ்தன் படம் ஸ்கிரிப்ட் கேட்கும் போது இதை பண்ணலாம்னு தோணிச்சா?


நான் கதை கேட்கல, படத்தோட ஸ்கிரிப்ட் படிச்சேன். அதுல நிறைய இருந்துச்சு. ஒரு வாரம் ஃபுல்லா படிச்சேன். படிச்சிட்டு எனக்கு என்ன தோணுச்சுனா நிறைய எழுதி இருந்தாங்க, நீங்க பார்க்கிற படமே நிறைய இன்சிடென்ட் இருக்கும். அதையும் தாண்டி இன்னும் நிறைய எழுதி இருந்தாங்க. திருப்பி கொஞ்சம் கட் பண்ண வேண்டியது இருந்தது. எனக்கு என்னன்னா ஃபர்ஸ்ட் ஒன்னே ஒன்னு தான், இந்தப் படத்துல ரிலேட்டிவா நேட்டிவா கோயம்புத்தூரை பத்தி இதுவரைக்கும் திரையில காட்டாத மக்களும் கேரக்டர்ஸ் எல்லாமே புதுசா இருந்தது. நாம எல்லாருமே பார்த்திருப்போம் இந்த புறணி பேசுறதா இருக்கட்டும் பயங்கரமான ஷோ ஆஃப் இருக்கிற மாமா இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் எனக்கு ரிலேட்டடா இருந்துச்சு. நம்ம இதை நிறைய பாக்குறோம் எல்லா வீட்டிலயும் பாக்குறோம் என்பதால இந்த படம் பண்ணலாம்னு தோணுச்சு. பொதுவாக பேமிலி ட்ராமா மெகா சீரியல்னு சொல்லிருவாங்க ஈசியா ஆனால் நம்ம ஆக்ஷன் படம் மாதிரி ஒரு பேமிலி ட்ராமா பண்ணுவோமே அப்படின்னு குடும்பஸ்தன் டைரக்டர் சொன்னார். அதே மாதிரி இயக்குனர் வி சேகர் எடுத்த படம் வரவு எட்டணா செலவு பத்தணா அந்த மாதிரி ஸ்கிரிப்ட் தான் குடும்பஸ்தன். ஆனால் அதை எனக்கு ரொம்ப பிடித்த இங்கிலாந்து டைரக்டர் எட்கர் ரைட் பண்ணா எப்படி இருக்கும் அதுதான் எங்க ஐடியா.

kudumbasthan-movie-5-days-collection-update-2


குடும்பஸ்தன் படத்துல கோவை ஸ்லேங்க் பேசும் போது கஷ்டமா இருந்துச்சா?


கோவை ஸ்லேங்க் எனக்கு கஷ்டம் என்னன்னா அது பேசுறது ஈசி தான். ஆனா டைரக்டர் என்ன சொன்னார் என்றால் இப்போ யாரும் கோவை ஸ்லேங்க் பேசுறது இல்ல, இப்ப இருக்கிற யூத் யாருமே பேசுறது இல்ல அவங்க பேசுற மாதிரி நீங்க பேசுங்க. அப்படி பேசும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஏன்னா யாருமே பேசறது இல்லை இப்போ யாரு பேசுவா என்று தேடிப்போய் பேசுவது ரொம்ப ஸ்ட்ரக்கில் இருந்தது. ஆனால் குடும்பஸ்தன் படம் பார்த்துட்டு கோவை அவுட் சைடுல இருக்குறவங்க கோயம்புத்தூர் சைடுல இருக்குறவங்க என்ன சொல்லிட்டாங்கனா இது என்ன கோயம்புத்தூர் ஸ்லேங்க்கா? அப்படி கேட்டாங்க. ஆனா கோயம்புத்தூரில் இருக்கிறவங்க நல்லா பண்ணி இருக்காங்க அப்படின்னு சொன்னாங்க எனக்கு அதுதான் சந்தோஷம்.



நீங்க நடிக்குற படத்தின் கேரக்டராக மாற என்ன செய்வீங்க?


நான் அந்த இடத்துக்கே போய் ரிகர்சல் பண்ணுவேன், அது எனக்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணிருக்கு. ஒரு கேரக்டர் எடுத்தேனா அந்த இடத்துக்கு ஒரு வாரத்துக்கு போயி தங்கி ரிகர்சல் பாப்போம். ஏன்னா அது என்னோட பழக்கம். அது நான் சின்சியர் அப்படின்னு காமிக்கிறதுக்கு இல்ல, எனக்கு ஒரு பயம் வந்துரும் நம்ம தப்பா பண்ணிட கூடாது அப்படிங்கிற மாதிரி ஒரு பயம்.

உங்களுக்கு வேற எந்த மாதிரி கேரக்டர் நடிக்கிறதுக்கு ஆசை?


எனக்கு அப்படி எதுவும் ஆசை கிடையாது. நான் அப்படி எதுவும் லிமிட் பண்ணிக்கிறது இல்ல. இதுதான் பண்ணனும் அப்படிங்கறது இல்ல, நான் ரெலவன்ஸ் மட்டும் பார்ப்பேன், ஏன்னா இப்போ மக்கள் இருக்கிற நிலைமை அவங்க சந்திக்கிற பிரச்சனை அல்லது அவங்க பேசணும்னு நினைக்கிறது இது எல்லாமே அந்த கதையில உண்மை தன்மையா இருந்துச்சின்னா அது எந்த கேரக்டரா இருந்தாலும் நான் பண்ணுவேன். ஆனா எனக்கு முக்கியமான விஷயம் படத்தின் ரெலவன்ஸ் தான்.

தமிழ் சினிமால எழுத்தாளரா ஸ்டார்ட் பண்ணி அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்து இப்போ ஆக்டரா இருக்கிற இந்த ஃபீல் எப்படி இருக்கு?


இது எதுவுமே நான் எதிர்பாராதது நடந்தது அல்ல, இதெல்லாம் நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் எல்லாமே லேட்டா நடந்திருக்கு அப்படிங்கிற கவலை தான் எனக்கு இருக்கு. இது எல்லாமே நான் முன்னாடியே நடக்கும் என்று எதிர்பார்த்தேன். கனவு கண்டு இருந்தோம், ஆனா நம்ம நினைக்கிறது எல்லாம் நடக்கணும்ங்கறது இல்ல. நடந்தது எல்லாமே சந்தோஷம்தான். ஆனா நம்ம பண்ணனும் நினைக்கிற வேலை நிறைய இருக்கு. அந்த பயம் தான் எனக்கு, அய்யய்யோ அதெல்லாம் பண்ண முடியாம போயிடுமா லைஃப் டைம் அதுவரைக்கும் இருக்குமா நேரம் பத்துமா அதான் எனக்கு ஒரேய பயம்.

எப்பவாவது இந்த சினிமாவை விட்டு நம்ம போயிரலாம் அப்படின்னு யோசிச்சு இருக்கீங்களா?


ஆமா யோசிச்சது உண்டு. ஆனா அது சில டைம் அப்படி இருக்கும். ஆனா அது ஏதோ ஒரு வழியில என்னை நீ போகாத அப்படின்னு சொல்லி இருக்க வச்சுடும். ஒரு காலத்துல நான் பண்ணிட்டு இருந்த டப்பிங் அது எல்லாமே மொத்தமா குளோஸ் ஆயிடுச்சு. எனக்கு எல்லாமே க்ளோஸ் ஆனதும் வருமானத்துக்கு எதுவுமே இல்லாம போயிடுச்சு. அப்புறம் என் நண்பன் கிட்ட ஐடியில் ஏதாவது வேலை கேட்டேன். நான் இன்ஜினியரிங் முடிச்சிருந்ததுனால கம்பெனில எனக்கு ஏதாவது வேக்கன்சி இருந்தா பாருடா அப்படின்னு சொல்லி இருந்தேன். இதை அவன்கிட்ட சொல்றேன் கிட்டத்தட்ட கண்ணே கலங்கிடுச்சு, சினிமால வந்துட்டு நம்ம இப்படி போறோமே அப்படின்னு பயங்கரமா வெக்ஸ் ஆயிடுச்சு. அந்த நாள் நைட் லேட்டா தூங்கினேன் காலை லேட்டாக எந்திரிச்சேன். எந்திச்சு பார்த்தா மூணு மிஸ்டு கால், நலன் குமாரசாமி சார் கிட்ட இருந்து கால், ஆபீஸ் வரீங்களா அப்படின்னாரு. வரேன் சார் அப்படின்னு சொல்லிட்டு ஓடுறேன் வேக வேகமா போன உடனே ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்து படின்னு சொன்னாரு படிச்சேன். அப்ப அவரு இதுல ஒரு டிரைவர் கேரக்டர் இருக்கு அத நீங்க தான் பண்றீங்க அப்படின்னு சொன்னாரு. அதுக்கு முந்தின நாள் நைட்டு தான் நான் சினிமா விட்டு போயிடலாம் அப்படின்னு டிசைட் பண்ணேன். உடனே மறுநாள் இது நடந்துச்சு. அதே நண்பன் கிட்ட நான் போய் கேட்கிறேன், டேய் எனக்கு டிரைவிங் தெரியாது டிரைவர் ரோல் கிடைச்சிருக்கு, என்னை டிரைவிங் கிளாஸ் சேர்த்து விடுடா அப்படின்னு கேட்டேன். அந்த படம் தான் விஜய் சேதுபதி நடிச்ச காதலும் கடிந்து போகும்.

சினிமா இல்லனா இன்னிக்கு என்னவா இருந்துருப்பீங்க?


நான் இன்ஜினியரிங் நிஜமாவே நல்லா படிச்சேன். இன்ஜினியரிங் எலக்ட்ரானிக் இன்ஸ்ட்ருமெண்டேஷன் படிச்சேன், எனக்கு ரோபோடிக்ஸ் ஆட்டோமேஷன் மேல ரொம்ப காதல் உண்டு. அதனால நான் ஏதாவது ஆட்டோமேஷன் இன்ஜினியரா ஏதாவது ஒரு கம்பெனில அம்பத்தூர் அல்லது ஆவடியில் ஏதாவது ஒரு கம்பெனியில் நான் வேலை பார்த்துட்டு இருந்திருப்பேன். பயங்கர சந்தோசமாக இருந்திருப்பேன். இப்பயும் சந்தோஷமாக தான் இருக்கேன். அதாவது இக்கரைக்கு அக்கரை பச்சை னு சொல்லுவாங்கல அது மாதிரி. ஒருவேளை அந்த லைஃப் நான் போயிருந்தேனா சினிமாவ பாத்து மிஸ் பண்ணிட்டோமே கஷ்டப்பட்டு பீல் பண்ணி இருப்பேன்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP