எதிர்நீச்சல் சீரியலில் 40% சொத்து சேரினை யாருக்கு கொடுப்பது என்பதை தீர்மானித்து அதுகுறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாகப் பாட்டி பட்டம்மாள் குடும்பத்தினருடன் பேசுகின்றார். பட்டமாள் படித்த மேதாவி மேலும் பன்பாடு, நாகரீகம் தெரிந்த நல்ல மனுசி என்பதை தன்னுடைய பேச்சு மற்றும் பாவனையில் அழகாகத் தெரிவித்து இருப்பார். யாரை எப்படி டீல் செய்ய வேண்டும் என்பதை நன்கு தெரிந்திருந்தால் அதன்படி நந்தினி, ரேணுகாவை ஷோபாவில் அமர வைத்து இந்த விஷயத்தைப் பேச ஆரம்பித்தார்.
கரிகாலன் அம்மாவை ஓரமாக நிற்க வைத்து இந்த வீட்டின் சாபக்கேடு என்பதையும் பாட்டி பட்டாம்மாள் தெரிவித்தார். சக்தி, ஜனனியையும் அழைத்து உட்கார வைக்க முயற்சிக்கையில் இருவரும் மரியாதையுடன் பரவாயில்லை என்று மறுக்கின்றனர். தான் கொடுத்து ஐடியாவில் வளர்ந்த ஆதி குணசேகர் வாழ்க்கையைப் பற்றிக் குடுப்பத்தாருடன் பேசுகின்றார். ஆதிகுணசேகரன் நன்றி மறத்தலையும் வீட்டாருடன் சுட்டிகாட்டுகிறார்.
விசாலாட்சி அதை மறுக்கின்றார், ஞானமும் அதை மறுத்துப் பேசுகின்றார். இதையெல்லாம் கண்டுக்காமல் டீலில் விடுகிறார் பாட்டி, அடுத்ததாக இருக்கும் 40% சொத்துப் பங்கை யாருக்கு ஒப்படைப்பது என்பதையும் தெரிவிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தார். இதனை அடுத்து அவர் இரண்டு நாட்களுக்கு முன்பே திருவிழாவிற்கு செல்ல இருப்பதாகவும் சொல்ல, கரிகாலன் முந்திக்கொண்டு ‘அப்பத்தா நீங்களுமா’ என்று சொல்ல அப்பத்தா அதற்கு விசாலாட்சியிடம் ‘நீங்களும் வருகிறீர்களா’ என்று கேட்டபோது நான் பெரிய மகன் வந்ததும் வருவதாக விசாலாட்சி இருமாப்புடன் பேசுகிறார்.
அடுத்து வரவிருக்கும் விழாவிற்கு இந்த 40% சேர்ப்பற்றி அப்பத்தா நல்ல முடிவை எடுத்துத் அதுகுறித்த முடிவை அறிவிக்கவுள்ளார். 40% சேரினை மருமகள்களுக்கு தருவாரோ என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் கதிர் ஜீவானந்தத்தை சாகடிக்கவும் முடிவு செய்து இருக்கின்றார். கதிர் எடுத்திருக்கின்ற இந்த முடிவால் அங்கு என்ன நிகழும் என்று அச்சமானது நிச்சயம் ஈஸ்வரிக்கு வந்துள்ளது. இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று அடுத்து வரும் எதிர்நீச்சல் காட்சிகளில் தெரியவரும்.
மேலும் படிக்க: எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து பரபரப்பு திருவிழாவில் இருக்கு செம டிவிஸ்ட்
எதிர்நீச்சலில் வசனங்கள் பட்டம்மாள் பாட்டிக்கு நச்சென்று தரப்பட்டிருக்கின்றது. அத்துடன் விசாலாட்சியும் கதிரும் பேசும் பேச்சுக்கள் நம்மையே வெறுக்க வைக்கின்றது. அதனைவிட ஜான்சி ராணிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அந்த அதிகார தோரணை வார்த்தைகள் நம்மை வெறுப்போற்றினாலும் அந்தப் படைப்பாற்றலுக்கு பின் இருக்கும் உழைப்பை நாம் உணர முடிகின்றது. எதிர்நீச்சல் சீரியல் ஏன் இவ்வளவு டாப்பில் இருக்கின்றது என்றால் அதில் வரும் கதாபாத்திரங்கள் அவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். அதன் காரணமாகவே இது மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கின்றது இதற்குச் சன் டிவியும் முக்கிய ஏற்பாடுகள் செய்கின்றது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation