herzindagi
image

சென்னை வானிலை : இடி, மின்னலுடன் அடுத்த 4 நாட்களுக்கு மழை பொழியும்

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Editorial
Updated:- 2025-07-17, 20:48 IST

ஆடி மாதத்திற்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் இம்மாதத்தை மழையை கொண்டு வரும் மாதம் என்பார்கள். இம்மாதத்தில் விவசாய பணிகள் துரிதப்படுத்தப்படும். ஆடி முதல் நாளான ஜூலை 17ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. அடுத்த சில தினங்களுக்கான தமிழகம் மற்றும் சென்னை வானிலை நிலவரத்தை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழக வானிலை நிலவரம்

ஜூலை 18ஆம் தேதி தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைபகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிபேட்டை, காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 19 மற்றும் 20 தேதிகளில் நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 21ஆம் தேதி நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 22ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக ஜூலை 18,19,20ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 65 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாம் என்பது கணிப்பாகும்.

சென்னை வானிலை நிலவரம்

நகரின் ஒரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்ககூடும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com