எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஒரு வாரமாகச் சிறையில் இருக்க வேண்டுமா என்ன கொடுமை சார் ஏற்கனவே குணசேகரன் இல்லாமல் குளுகுளுனு இருந்த அந்தக் குடும்பம் மீண்டும் குணசேகரனா வந்துட்டாரா, என்று நிலை குலைந்து இருந்தது. ஆதி குணசேகரன் கெத்தாகத் திமிராகக் காவல்துறையினரை அடித்துத் தம்பிகளை மீட்டு வீட்டுக்கு வந்த மறுநாளே மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டிய சூழல், சீன் போட்டுக் காவல்துறையை அடித்ததால் தம்பிகளை எல்லாம் விட்டுவிட்டு குணசேகரன் படித்து வைத்து விட்டது காவல்துறை. அவரை வெளியில் எடுக்கக் கதிர் போராட்டம் இது இப்படி இருக்க, பாட்டி பட்டம்மாள் சமையல் அறையிலிருந்து வெளியேற்றப்பட்ட ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி பிள்ளைகளுடன் கவலையுடன் உட்கார்ந்து இருக்க 'உங்கள் மாமியாரை உங்களுக்கு நல்ல வழியைக் கட்டி விட்டார்' இன்னும் ஏன் இப்படியே விழுந்து போய்க் கிடக்கிறீர்கள், அடுத்த தொடக்கத்தைப் பாருங்கள் என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார்.
கோயில் விழா நடப்பதால் அந்த விழாவிற்கு ஜீவானந்தத்தை சிறப்பு அழைப்பாளராகப் பட்டமாள் அழைத்து இருக்கின்றார். அது சரியாக வராது என்று ஈஸ்வரி தெரிவிக்க இல்லை இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று அவருடைய பார்வையில் தெரிகிறது. அதனைப் பின்தொடர்ந்து கேட்டு வந்த கதிர், ஞானம் மற்றும் விசாலாட்சி மாமியார் ஆகியோர் பட்டமாளுடன் பேசுகின்றனர்.
ஜீவானந்தம் வரட்டும் அவனுக்கு ஒரு முடிவு கட்டுவதாகத் தெரிவித்துச் செல்கின்றார் கதிர். விசாலாட்சி இது சரி இல்லை என்றும் மாமியாரை மிரட்டிக் கொண்டு செல்கிறார்.
எதிர்நீச்சல் வீட்டைச் சமயலறையை கைப்பற்றிய ஜான்சி ராணி அந்த வீட்டு சமையல் அறையில் சகலமும் செய்கின்றார். தனியே சமைத்து பிள்ளைகளுக்குச் சோர் ஊட்டும் நந்தினி, ரேணுகா வேலையைத் தொடங்க ஆயத்தமாகும் ஜனனி. மீனாட்சி அம்மனை வேண்டிச் செல்ல அதற்குக் கெட்ட சகுனமாக, முட்டுக்கட்டாக விளங்காது எனப் பேசுகிறார். இதயம் கெட்டு பேசும் ஜான்சி ராணி இதனால் மனம் தளராத ஜனனி வெளியே சென்று பணியைத் தொடங்க ஆயுத்தமாகியுள்ளார்.
இதற்கிடையில் ஈஸ்வரி ஜீவானந்தத்தை பார்க்க வெளியே சென்று வருகின்றார். அவருடைய மனைவி கொலைக்குக் காரணம் தனது கணவரும் கொழுந்தனாரான கதிரும் என்று தெரிவித்து விடுகிறார். எதிர்நீச்சல் சூடுபிடிக்க தொடங்கி விடும் அடுத்த வாரம் அமர்க்களமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். எதிர்நீச்சல் வீட்டு மருமகள்கள் தனித்து போய் நின்று பிழைக்க வேண்டிய ஒரு புதிய சீக்குவன்ஸ் வரும் என்றும் அதில் அவர்களது கஷ்டம் முன்னேற்றம் எனச் சீரியல் படுஜோராகப் போகும் என்றும் நம்பப்படுகின்றது. இதற்கிடையில் ஆதி குணசேகரன் இல்லாமல் எதிர்நீச்சல் எப்படி இருக்கும் என்று பேச்சும் இருக்கின்றது.
ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்த ராமவேல மூர்த்தி அதில் தொடர்வாரா அல்லது வேறொருவர் அந்தக் கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்வாரா என்ற சந்தேகமும் பேச்சுக்களும் அரசல் புரசலாக இருக்கின்றன. பார்ப்போம் என்ன தான் நடக்கிறது என்று எது எப்படியோ நமக்கு நல்ல சீரியல் நடந்தால் சரி எதிர்நீச்சல் வீட்டு குடும்பத்தைப் பெண்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கோரிக்கையும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருக்கின்றது டிஆர்பி ரேட்டிங் தக்க வைத்துக் கொள்ள சன் டிவியும் இதில் மெனகட இருக்கின்றது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com