எதிர்நீச்சல் சீரியலில் கௌதமிடமிருந்து தப்பிக்கும் கதிர், எதிர்பாராத விதமாகக் கதிர் மாட்டியிருக்கும் வீட்டிற்கு அருகில் காவல் துறையினர் ரவுண்ட்ஸ் வருகையில் கௌதம் நன்பரைப் பார்த்தவுடன் சந்தேகப்பட்டு விசாரிக்கின்றனர். அவரைப் பின் தொடர்ந்து காவல்துறை செல்கின்றனர். காவல்துறையினர் வருவதைப் பார்த்துக் கௌதம் மற்றும் அவரது நண்பர்கள் வெளியேறி ஓடிச் செல்கின்றனர். அவர்களைப் பிடிக்கச் சென்ற காவல் துறையினர் பிடிக்க முடியாமல் கதிர் இருக்கும் இடத்திற்கு சென்று கதிரை விடுவித்து விசாரிக்கின்றனர். என்ன நடந்தது என்பதை பிறகு சொல்கிறேன் என்று கதிர் கலந்து கொண்டு வளவன் வண்டியில் ஏறிப் பயணமாகி ஆதி குணசேகரன் அண்ணனைப் பார்க்கச் செல்கிறார்.
சக்தியிடம் மிரட்டல் கடி வாங்கிய ஜான்சி ராணி பழிவாங்க வேண்டும் என்று கண்ணீரும் கம்பளையுமாக நடிப்பு பட்டலங்களை அவிழ்த்து விட்டுக் குணசேகரனிடம் கதை கட்டுகிறார். அப்போது வந்த பட்டம்மாள் பாட்டி அசைவம் சமைக்க முடியாது இங்கு யார் என்ன அதிகாரம் செய்தாலும் சைவம் தான் வழங்கப்படும் என்றும் பதில் சொல்லிச் செல்கிறார்.
குணசேகரன் வீட்டு பெண்கள் சமையல் செய்ய ஆயத்தமாகி கொண்டிருக்கும்போது கதிர் வீட்டுக்கு வருகிறார் கதிர் அடி பட்டு இருப்பதை பார்த்துக் குணசேகரன் என்ன ஆகிவிட்டது என்று கேட்க, கதிர் தனியே சென்று விளக்குகிறார்கள்.
நந்தினியிடம் அதற்கு அடிப்பட்டு இருப்பதை உறவினர்கள் தெரிவிக்க அதைப் பார்த்து எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ரேணுகா சொல்லி அனுப்புகிறார். பின்பு எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்காமல் நந்தினி வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்டதற்கு கண்டபடி பேசினால் யாரும் கேட்டுக் கொள்ள மாட்டார்கள் அடி உதை தான் விழும் என்பதை தெரிவிக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் மறுபக்கம் ஈஸ்வரியின் மகன் தர்ஷன் கோபம் மற்றும் ஏமாற்றத்துடன் அமர்ந்திருக்கிறான் ஈஸ்வரியிடம் எனது நண்பர்களின் அப்பாக்கள் எவ்வளவு நட்புடன் பழகுகிறார்கள். ஆனால் இவர் என்னவென்றால் இப்படி இருக்கிறார் என்று சொல்லி இதுவே தொடர்ந்தால் இனி இவருடன் இருக்க முடியாது. இதற்கு ஒரு முடிவெடுக்க வேண்டும் என்பதை உறுதியாகச் சொல்லி ஈஸ்வரியை அழைக்கின்றார். தாயும் மகனும் தடுமாறி நிற்கின்றனர் மகனைச் சமாதானப்படுத்த முடியாமல் ஈஸ்வரியும் வெளி பிரிந்து நிற்கின்றார்.
திருவிழா ஏற்பாடுகள் நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. திருவிழாவில் கதிர், ஆதி குணசேகரன் ஜெயிப்பார்களா அல்லது ஜீவானந்தம், கௌதம் நண்பர்கள் ஜெயிப்பார்களா யாருக்கு என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புகள் சீரியலில் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கின்றது. எதிர்நீச்சல் சீரியலில் பரபரப்புக்கு என்றும் பஞ்சம் இருக்காது இந்த முறையும் அப்படியே தான் இருக்கின்றது. பட்டம்மாள் பாட்டி ஜீவானந்ததை அழைத்து இருந்ததை தெரிவித்து சுவிட் ஆஃப் ஆகியுள்ளதையும் சொல்கிறார். நந்தினி எதுவும் தெரியாமல் நிற்கிறார். இப்பிடியாகப் பரப்பரப்பை கிளப்புகிறது எதிர்நீச்சல்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation