முருகப் பெருமானை முறையாக வழிபட்டால் நினைத்த காரியம் கைக்கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கார்த்திகை விரதம், மாதந்தோறும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டி விரதம் என இந்த நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். இருந்தாலும் நினைத்தக் காரியம் நிறைவேற வேண்டும் எனவும், வேண்டிய காரியங்களை நிறைவேற்றிக் கொடுத்த முருகனை வணங்கி வழிபடுவதற்கு உகந்த நாளாக உள்ளது மகா கந்த சஷ்டி விரதம். ஐப்பசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி சஷ்டி வரை 48 நாட்கள் மக்கள் விரதம் இருப்பது வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா சஷ்டி விரதம் இந்தாண்டு எப்போது துவங்குகிறது? இந்த நாளில் மக்கள் செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து இங்கு அறிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: சூரனை முருகப்பெருமான் வதம் செய்த "சூரசம்ஹார" வரலாறு
2025 ஆம் ஆண்டிற்காக சஷ்டி விரதம் வருகின்ற அக்டோபர் 22 ஆம் தேதி .சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாசம் வருகின்ற அக்டோபர் 27 ல் நடைபெறும். இந்த நாளுக்கு முன்னதாக முருக பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த விரதமானது வருகின்ற செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நாட்களில் மாலை அணிந்து முருகப் பெருமானை மனமுருகி வேண்டினால் நினைத்தக் காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கையை முருக பக்தர்கள் அதிகளவில் கொண்டுள்ளனர்.
48 நாட்கள் இருக்கும் மகா சஷ்டி விரதம் செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்கிறது என்பதால், அதற்கு முந்தைய நாளான அதாவது செப்டம்பர் 9 ஆம் தேதியே பூஜை அறைகளை சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். அங்குள்ள அனைத்து சாமி படங்களையும் துடைத்து புதிய மலர்களை வைக்கவும்.
காலையில் விரதத்தைத் துவங்க வேண்டும். அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று என்ன வேண்டி விரதம் இருக்கிறீர்கள்? என எழுதி வைக்கவும். ஒருவேளை அங்கு செல்ல முடியவில்லையென்றால் வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபட ஆரம்பிக்கவும்.
மேலும் படிக்க: திருப்பம் தரும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் வரலாறும், சிறப்புகளும்
Image credit - Instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com