Ethir Neechal Serial Actress : எதிர்நீச்சல் சீரியல் ஹரிப்ரியாவுக்கு குவியும் வாழ்த்து! என்ன விசேஷம் தெரியுமா?

எதிர்நீச்சல் சீரியல் ஹரிப்ரியாவுக்கு இன்று பிறந்த நாள். வெள்ளித்திரை பிரபலங்கள் தொடங்கி சின்னத்திரை பிரபலங்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

 

ethir neechal nandhini

ஆங்கர், சின்னத்திரை நடிகை, யூடியூப்பர் என பன்முகங்களை கொண்டவர் நடிகை ஹரிப்ரியா. தற்போது சன் டிவி எதிர்நீச்சல் சீரியலில் நந்தினியாக நடிக்கிறார். இல்லை இல்லை நந்தினியாகவே வாழ்கிறார் எனலாம். அந்த அளவுக்கு அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்து பாராட்டுக்களை அள்ளியுள்ளார். எதிர் நீச்சல் சீரியலில் இவரின் நந்தினி ரோலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இவரின் நடிப்பு பல விருதுகளை வாரி குவித்துள்ளது. இதற்கு முன்பு ப்ரியமானவளே சீரியலில் இசையாக நடித்து வரவேற்பை பெற்றார் ஹரிப்ரியா.

சன் டிவியில் வணக்கம் தமிழா நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். ஹரிப்ரியாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இவரின் கணவர் பிரபல் சீரியல் நடிகர் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஒருபக்கம் நடிப்பு, சிங்கிள் மதர் என தனது வாழ்க்கையில் பல பரிமாணங்களில் கலக்கி வருகிறார் ஹரிப்ரியா. இன்றைய ஜென்ரேஷன் பெண்களுக்கு ரோல் மாடலாகவும் உள்ளனார்.

haripirya isai

இன்றைய தினம் ஹரிப்ரியாவுக்கு பிறந்த நாள். ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அதுமட்டுமில்லை எதிர் நீச்சல் சீரியல் குழுவும் ஹரிப்ரியாவுக்கு வாழ்த்து கூறி இன்ஸ்டாவில் போஸ்ட்களை ஷேர் செய்துள்ளனர். எதிர் நீச்சல் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹரிப்ரியாவுக்கு சர்ப்ரைஸாக கேக் கட்டிங் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பதிவும் உதவலாம்:கலக்க போவது யாரு தீனாவின் திருமண புகைப்படங்கள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: instagram

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP