
பொதுமக்களிடையே செல்வாக்கு கொண்ட நபர்கள் பேசும் விஷயத்தில் கவனமாக இருப்பார்கள். ஏனெனில் சிறு விஷயத்தை தவறாக குறிப்பிட்டாலும் சர்ச்சையாகி விடும். பூனை மேல் மதில், கம்பராமாயணம் எழுதிய சேக்கிழார் என பிரபலங்கள் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. இந்த நிலையில் நடிகர் விஜய் பொதுமேடையில் பேசிய விஷயம் சர்ச்சையாகியுள்ளது. தனது பேச்சை முடிக்கும் போது ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின் என்ற திருக்குறளுக்கு முன்பாக பிரபலமான Men may come men may go but i go on for ever வரிகளை மேற்கொள் காட்டினார். விஜய் இதை எழுதியவர் யார் என்பதை குறிப்பிடும் போது சற்று தடுமாறிவிட்டார்.
Men may come men may go but i go on for ever எனக் கூறிய இங்கிலாந்து கவிஞர் வில்லியம் பிளேக்கின் பெயரைக் குறிப்பிட்டார். வில்லியம் பிளேக் 1757ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் லண்டனில் பிறந்தவர். இவர் எழுதிய சாங்ஸ் ஆஃப் இன்னோசென்ஸ் அண்ட் எக்ஸ்பீரியன்ஸ் மிகவும் பிரபலமானது. அதில் பல கவிதைகளும் இருக்கும். அக்காலத்தில் அவருடைய படைப்புகளுக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அவருடைய கவிதைகள் உலகளவில் புகழ்பெற்றவை. சரி விஷயத்திற்கு வருவோம்.
Men may come men may go but i go on for ever இந்த வரிகள் தி புரூக் என்ற கவிதையில் இடம்பெற்றவை. இதற்கு மனிதர்கள் வரலாம், மனிதர்கள் போகலாம் ஆனால் நான் என்றென்றும் செல்கிறேன் என்பது அர்த்தமாகும். இந்த வரிகள் மிக பிரபலம். தி புரூக் கவிதை எழுதியவர் இங்கிலாந்தில் பிறந்த ஆல்ஃபிரட் லார்ட் டென்னிசன். அவர் விக்டோரியன் காலத்து கவிஞராவார்.
ஆல்பிரட் லார்ட் டென்னிசன் 1809ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தவர். தனது எழுத்துகளுக்காக 1850ல் இங்கிலாந்தின் புரவலர் எனும் உயரிய கவிஞர் பதவியை வகித்தார். விஜய் குறிப்பிட்ட வில்லியம் பிளேக் 1757ல் பிறந்து 1827ல் இறந்தவர்.
மேலும் படிங்க விஜய்க்கு வழங்கப்படும் Y பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன ? செலவு எவ்வளவு தெரியுமா ?
பேசும் போது எப்போது கவனம் தேவை என்பார்கள். சிறிய விஷயத்தை சொல்லும் விதத்தில் அதன் ஒட்டுமொத்த பொருளும் மாறிவிடலாம். ஏற்கெனவே ஒரு நிகழ்வில் விஜய் ரஷ்ய அதிபர் மாவோ என பேசியிருந்தார். ஆனால் மாவோ புரட்சிகரமான சீன அதிபர் ஆவார். எழுத்தாளர் விவரத்தை விஜய் தவறாக கூறி இருந்தாலும் கருத்தை சரியாக தானே பதிவு செய்தார் என அவரது ரசிகர்கள் வாதிடுகின்றனர்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com