herzindagi
image

கிரிக்கெட் வீரர் ரவி அஷ்வினின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடிகளா ? ஒரு போட்டிக்கு பெறும் ஊதியம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினின் சொத்து மதிப்பு, விளம்பர வருவாய், கிரிக்கெட் சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் அஷ்வின் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்தார்.
Editorial
Updated:- 2024-12-18, 19:30 IST

அஷ் அண்ணா, நம்ம வீட்டு பிள்ளை என கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் டிசம்பர் 18ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சுமார் 13 வருடங்களாக இந்தியாவின் வெற்றிகரமான சுழற்பந்துவீச்சாளராக விளங்கியுள்ளார். கிரிக்கெட் களத்தில் மட்டுமல்ல பொருளாதார ரீதியாகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அஷ்வின் நிகர மதிப்பு, சொத்து, போட்டிக்கு பெறும் ஊதியம், விளம்பர வருவாய் உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ravi ashwin salary income

அஷ்வினின் நிகர மதிப்பு

நமக்கு கிடைத்த தரவுகளின்படி அஷ்வினின் சொத்து மதிப்பு 132 கோடி ரூபாய் ஆகும். கிரிக்கெட் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இந்தியாவிற்காக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடக் கூடியவரான அஷ்வினுக்கு ஐபிஎல் தொடரில் இருந்தும் வருவாய் கிடைக்கிறது.

அஷ்வினின் சம்பளம்

அஷ்வின் ஒரு வருடத்திற்கு 10 கோடி ரூபாயும் ஒரு மாதத்திற்கு ஏறக்குறைய 50 லட்சம் ரூபாயும் சம்பாதிக்கிறார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒரு சீசனுக்கு 5 கோடி ரூபாய் பெறுகிறார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட 9.75 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காவும் அஷ்வின் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் ஏ பிரிவில் அஷ்வின் உள்ளார். இதற்கு ஒரு வருடத்திற்கு 5 கோடி ரூபாய் கிடைக்கும். இது தவிர்த்து போட்டி கட்டணமும் கிடைக்கும்.

அஷ்வினின் ஐபிஎல் சம்பளம்

அஷ்வின் தனது ஐபிஎல் பயணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆரம்பித்தார். அப்போது அவர் வாங்கிய தொகை 12 லட்சம் ரூபாய். பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறார். பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது ஒரு சீசனுக்கு 7 கோடியே 60 லட்சம் ரூபாய் பெற்றார். ஐபிஎல் போட்டிகள் மூலமாக 82 கோடி ரூபாய் ஈட்டியுள்ளார்.

அஷ்வினின் விளம்பர ஒப்பந்தம்

மிந்த்ரா, அரிஸ்டோகிராட், மூவ், ஸ்பெக்ஸ்மேக்கர், ட்ரீம் 11 உட்பட பல நிறுவனங்களின் விளம்பரங்களில் ஒப்பந்தமிட்டு நடிப்பதனம் மூலம் அஷ்வினுக்கு கணிசமாக தொகை கிடைக்கிறது. யூடியூப்பில் இருந்தும் ரவி அஷ்வினுக்கு வருமானம் கிடைக்கிறது.

மேலும் படிங்க "ரசிகர்களின் தல" நடிகர் அஜித் குமாரின் சொத்து மதிப்பு; ஒரு படத்திற்கு கோடிகளில் ஊதியம்

அஷ்வினின் குடும்பம்

தந்தை - ரவிச்சந்திரன்
தாய் - சித்ரா ரவிச்சந்திரன்
மனைவி - ப்ரீத்தி நாராயணன்
குழந்தைகள் - அகிரா, ஆத்யா

அஷ்வினின் வீடு & கார்

சென்னையில் அஷ்வின் வசிக்கும் வீட்டின் மதிப்பு ஒன்பது கோடி ரூபாய் ஆகும். ரியல் எஸ்டேட்டிலும் அஷ்வின் முதலீடு செய்துள்ள தொகை சுமார் 26 கோடி ரூபாய். அஷ்வினிடம் 6 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடி 7 கார் வைத்திருக்கிறார்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com