"ரசிகர்களின் தல" நடிகர் அஜித் குமாரின் சொத்து மதிப்பு; ஒரு படத்திற்கு கோடிகளில் ஊதியம்

அல்டிமேட் ஸ்டார், தல, கடவுளே அஜித்தே என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித்குமாரின் நிகர மதிப்பு, ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம், சொந்தமான கார்கள், துபாய் ரேஸிங் நிறுவனம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
image

திரையரங்குகளில் பிரளயம் ஏற்படுத்தும் ரசிகர் கூட்டத்தை ஒற்றை பக்க அறிக்கையில் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட நடிகர் அஜித் தமிழ் சினிமாவிற்கு அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானதை அனைவரும் அறிந்திருப்போம். 30 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றி, தோல்வி என ஏற்ற இறக்கம் கண்ட அஜித்தை அவரது ரசிகர்கள் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. 60க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்ட அஜித் தற்போது ரேஸிங், உலக சுற்றுலா என தனக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்த பதிவில் அவருடைய நிகர மதிப்பு, ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம், சொந்தமான கார்கள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

நடிகர் அஜித்தின் சம்பளம்

2023ல் வெளியான துணிவு படத்திற்கு அஜித் 70-75 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கிருந்தார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துள்ள விடாமுயற்சி படத்திற்கு 100-105 கோடி ரூபாய் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்திற்கும் இதே சம்பளம் என்பது கோலிவுட் வட்டார தகவலாகும். DNA தளத்திலும் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் நிகர மதிப்பு

வேதாளம் படத்தின் மூலமாக தமிழகத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்ததில் இருந்து அஜித்தின் மார்க்கெட் ஏறுமுகத்திலேயே உள்ளது. விவேகம், வலிமை ஆகிய படங்களில் அஜித் சறுக்கினாலும் விஸ்வாசம், துணிவு, நேர்கொண்ட பார்வை படங்களின் வெற்றியின் மூலம் மார்க்கெட்டை விரிவுபடுத்தினார். நடிகர் அஜித் குமாரின் நிகர மதிப்பு 350 கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் விளம்பர படங்களில் எதுவும் நடிப்பதில்லை. இதில் தனி வருவாய் எதுவும் கிடையாது.

துபாய் ரேஸிங் நிறுவனம்

அஜித் கடைசியாக 2010ல் பார்முலா 2 ரேஸிங் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று இருந்தார். அதன் பிறகு தற்போது துபாய் ரேஸிங் மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக அஜித் குமார் ரேஸிங் என்ற நிறுவனமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல உலக சுற்றுலா செல்வதற்காக வீனஸ் மோட்டார் டூர்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

மேலும் படிங்கநடிகர் விஜய்யின் அசர வைக்கும் சொத்து மதிப்பு; ஒரு படத்திற்கு இத்தனை கோடிகளா

அஜித் வசம் உள்ள கார்கள்

பைக் மீது காதல் கொண்டவரான அஜித்திடம் விதவிதமான கார்கள் உள்ளன. இதில் 34 கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி காரும் அடங்கும். சமீபத்தில் துபாயிலும் ஆடம்பர கார் ஒன்றை வாங்கினார். திருவான்மியூரில் உள்ள வீடும் பல கோடி ரூபாய் மதிப்பிலானது.

குட் பேட் அக்லி, விடாமுயற்சி

விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகவுள்ளது. குட் பேட் அக்லி படத்திற்கு இன்னும் ஒரு வார சூட்டிங் உள்ளது. எனினும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ரசிகர்கள் இரண்டு படங்களையும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP