உடல் எடை காரணமாக கேலி கிண்டலுக்கு ஆளான இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் 2 மாதங்களுக்குள் 17 கிலோ எடையை குறைத்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். திறமை இருந்தும் நூறு நூறாக ரன்களை குவித்தும் இந்திய அணியில் நிரந்திட இடம் பிடிக்க முடியாமல் தடுமாறும் சர்பராஸ் கான் இரண்டே மாதங்களில் உடல் எடையில் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தியுள்ளார். முன்னதாக மினி இன்ஜமாம் போல் காட்சியளித்த சர்பராஸ் கான் தற்போது முதலாம் ஆண்டு கல்லூரி மாணவன் போல் ஜொலிக்கிறார். சர்பராஸ் கானின் எடை இழப்பு பயணம், உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
சர்பராஸ் கானின் உணவுமுறை
சர்பராஸ் கான் தனது எடையை குறைக்க 2 மாதங்கள் கூட எடுத்துக் கொள்ளவில்லை ஒன்றரை மாதத்தில் உணவுமுறையை பின்பற்றி, உடற்பயிற்சி செய்து எடையைக் குறைத்திருக்கிறார். சாதம், ரொட்டி, மாவு உணவுகள், சர்க்கரை, பேக்கரி தின்பண்டங்களை முற்றிலும் தவிர்த்து நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறி சாலட், புரதத் தேவைக்காக மீன், சிக்கன் மற்றும் முட்டை சாப்பிட்டுள்ளார். நல்ல கொழுப்பிறகு அவகேடோ பழம் உதவியுள்ளது. கிரீன் டீ மற்றும் கிரீன் காஃபி குடித்துள்ளார்.
எவ்வளவு கடுமையாக உடற்பயிற்சி செய்தாலும் எடை குறைப்புக்கு நம்முடைய உணவுமுறை 80 விழுக்காடும், செய்யும் உடற்பயிற்சி 20 விழுக்காடும் பயனளிக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சாப்பிடும் உணவில் கட்டுப்பாடு இருந்தால் உடல் தோற்றத்தை வேகமாக மாற்றலாம்.
கார்போஹைட்ரேட் சாப்பிடாமல் இருக்கலாமா ?
சாதம், மைதா மாவு, சர்க்கரை போன்ற கார்போஹைட்ரேட்ஸ் உடலுக்கு சட்டென ஆற்றல் அளிக்க கூடியவை. கார்போஹைட்ரேட் உணவுகளால் உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும். இதன் காரணமாக உடலில் கொழுப்பு தேங்கும், வளர்சிதை மாற்றம் குறையும். கார்போஹைட்ரேட் குறைந்த உணவுமுறை நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்டது. இவற்றை உட்கொள்வதால் பசி குறையும், இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
மேலும் படிங்க60 கிலோ எடையை குறைத்து சிக்ஸ் பேக் வைத்த சூர்யா சேதுபதி; ஒரு வருடத்தில் நிகழ்ந்த மாற்றம்
சர்பராஸ் கானின் உடற்பயிற்சி
சர்பராஸ் கான் தனது தசைகளை வலுப்படுத்தவும், வலிமையை அதிகரித்திடவும் மற்றும் தோற்றத்தை மேம்படுத்தவும் உடற்பயிற்சி செய்துள்ளார். ஏரோபிக்ஸ், ஓட்டப்பயிற்சி, நீச்சல்பயிற்சி, நடனம் ஆகியவை கார்டியோ பயிற்சிகளாகும். எடை தூக்குதல் உடல் தோற்றத்தை மேம்படுத்தும். அதே நேரத்தில் கொழுப்புகள் எரிக்கப்படும். இதோடு ஸ்குவாட், தண்டால் எடுத்தல், ஜம்பிங்க் ஜாஸ்க் எடையைக் குறைக்க உதவும்.
நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால் மேற்கண்ட உணவுமுறை திட்டம் மற்றும் உடற்பயிற்சி விவரங்கள் உதவலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation