
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ரெட்டை வால் குருவி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகர் அஸ்வின் குமார். இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக பாவ்னி ரெட்டி நடித்திருந்தார். இந்த சீரியல் முடிக்கப்பட்ட பின்பு அஸ்வின் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் தேடி அலைய தொடங்கினார். ஒருசில படங்களில் துணை நடிகராகவும் நடித்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்டார். இவருக்கும் சிவாங்கிக்குமான கெமிஸ்ட்ரி ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது. அதன் பின்பு அஸ்வினுக்கு பெண் ரசிகைகள் அதிகரித்தனர்.
பின்பு ஆல்பம் பாடல்களில் லீட் ரோலில் நடித்தார். அடி போலி, பட்டாசு போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அஸ்வினுக்கு வெள்ளித்திரையிலும் அழைப்புகள் வர படங்களில் நடிக்க தொடங்கினார். ஓ மணப்பெண்ணே, காதல் ஒன்று கண்டேன் போன்ற படங்களில் நடித்தார் பின்பு புகழுடன் சேர்ந்து நடித்த ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனுபவம் இல்லாமல் ஓவராக பேசி சர்ச்சையில் சிக்கினார். அதனால் அவருக்கு ’ஸ்லீப்பிங் ஸ்டார்’ என்ற பட்டமும் கிடைத்தது. தனது தவறுதலுக்கு மன்னிப்பும் கேட்டார் அஸ்வின்.

அதன் பின்பு பிரபுசாலமன் இயக்கிய செம்பி படத்தில் நடித்தார். அந்த படமும் அஸ்வினின் நடிப்புகாக அதிகம் பாராட்டப்பட்டது. இந்நிலையில் அடுத்து, அஸ்வினுக்கு கல்யாணம் என்ற செய்தி இனையத்தில் வெளியாகியுள்ளது. பெரியவர்களால் பார்த்து பேசப்பட்ட திருமணம் எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லை பிரபல தயாரிப்பாளரின் மகளை தான் அஸ்வின் திருமணம் செய்யவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. கூடிய விரைவில் இதுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com