Big boss season 7 task update: பிக்பாஸ் சீசன் 7 சாப்பிங் ரீபேமெண்ட் டாஸ்க் அடுத்து வைல்ட் கார்டு எண்ட்ரி ப்ரோமோ

பிக்பாஸ் சீசன் 7 பிகாஸ் வீட்டினர் டாஸ்க்கை முடிக்காமல்  தண்டனை வாங்கினர். வைல்டு கார்டு ப்ரோமோ வந்தாச்சு

  • Shobana M
  • Editorial
  • Updated - 2023-10-27, 16:43 IST
contest

பிக்பாஸ் சீசன் 7 வெற்றிகரமாகக் மக்கள் பார்வையில் இருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். பிக்பாஸ் சீசன் 7இல் சாப்பிங் ரீபேமெண்ட் டாஸ்கில் கார்ட்ஸ் அரேஞ்ச்மென்ட்ஸ் இருந்தது, இதில் அக்ஷயா வென்றுள்ளார் கார்டுகளை சரியாக ஒருங்கிணைத்து அதனை இணைத்துள்ளார். ஆனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து அதனைச் சரியாகச் செய்யத் தவறியதால் பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு வழங்க முடியாது என்றும் பிக்பாஸ் அறிவித்திருந்தார். பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களுடன் சரிசமமாக இறங்கி பிக்பாஸ் குரலும் காமெடி செய்து வருகின்றது என்றே சொல்ல வேண்டும். பூர்ணிமா டிஸ்கவுன்ட் கேட்க டிரஸ் மற்றும் மேக்கப் கல் வந்ததல்லவா அதுவே டிஸ்கவுன்ட் என்று சொல்லிவிட்டார்.

மாயா சுமால் பாஸ் வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்கின்றார். சுமால் பாஸ் வீட்டிற்கு சென்று சாப்பிட தயாராகி விட்டார் மாயா நிக்சனிடம் அனுமதி கேட்டுச் சென்று விட்டார். இதற்குப் பூர்ணிமா ‘நான் சுமால் பாஸ். வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை’ என்று சொல்ல அதற்குப் பதில் தரும் விதமாக மாயா பதில் தரப் பூர்ணிமா ‘நீங்கள் எப்படி சாப்பிடுகிறீர்கள்’ என்று பார்ப்போம் என்றும் சவால் விடுகின்றார்.

பிக்பாஸை சமாதானப்படுத்தி சாப்பாடு வாங்கலாம் என்று ஆளாளுக்கு ஒரு ட்ரை செய்கின்றனர் பிக்பாஸ் இதற்குப் பதில் அளிக்கவில்லை.

மேலும் படிக்க: பிக்பாஸ் சீசன் 7 ரேங்கிங் டாஸ்க் முதல் இடத்திற்கு முந்தும் பிரதீப்

கோலாகலமாகப் போட்டிகளும் வெற்றிகளும் பேச்சு வார்த்தைகளும் முட்டல், மோதல் என்று பிக்பாஸ் சீசன் ஏழு நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் 29ஆம் தேதி தொடர்ந்து மூன்று மணி நேரம் வைல்டு கார்டு என்ட்ரி நடக்க உள்ளது. இதில் ஐந்து பேர் புதிதாகப் பிக்பாஸ் வீட்டிற்குள் வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்போது இன்னும் என்னென்னவெல்லாம் நடக்கும் என்று யோசித்துப் பார்த்தாலே அடி தூளு செம ஜாலி என்பது போல ரசிகர்கள் உற்சாகமாகின்றனர். இது ஒரு கேம் என்பதால் அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

family

பிக்பாஸ் சீசன் 7 இரண்டு வீடு தற்பொழுது 15 பேர் இருக்கின்றனர். இந்த வீட்டில் விளையாட்டுகள் போட்டிகள் கடும் தீவிரமாக இருக்கின்றது. பிக்பாஸ் சோவை இன்னும் தீவிரமாக்க 5 வைல்டு கார்டு எண்ட்ரிகள் வரவுள்ளனர். அவர்கள் யார் என்ற கேள்வி அனைவரையும் கேட்கச் செய்கின்றது.

பிக்பாஸ் சீசன் 7 வைல்ட் கார்டில் வி.ஜே அர்ச்சனா வரவுள்ளார். இவர் ராஜா ராணி சீசன் 2 இல் நடித்துப் பிரபலமானார். கானா பாலா வருவதும் உறுதியாகியுள்ளது. கானா பாலா தனது பாட்டுகளால் பெயர் பெற்றவர். 'ஆடி போனால் ஆவணி' பாடல் அட்டக்கத்திப் படத்தில் பிரபலமான ஒன்றாக இருந்தது. 'நடுக்கடல கப்பல்' பாடலும் இவர் பாடியுள்ளார்.

விஜய் டிவி தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்த் பிக்பாஸ் சோவில் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் இவருக்கு அடுத்து சினிமா மற்றும் சீரியலில் நடித்த பப்ளு பிருத்விராஜ் பங்கேற்கவுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 7 இல் பங்கேற்கும் அடுத்த வைல்ட் கார்ட் போட்டியாளராக நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா பங்கேற்கிறார். 2008 இல் இவர் திறைக்குள் வெளிவாராத காதல் டு கல்யாணம் படத்தில் நடித்தார். 2014 அமரக் காவியம் படத்தில் நடித்துப் பிரபலமானார்.Image source: Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP