herzindagi
st week

Bigboss season 7 glance: பிக்பாஸ் சீசன் 7 வெளியேறத் துடிக்கும் இருவர்

பிக்பாஸ் சீசன் 7  பாவா மற்றும் மாயா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறமுடிவு 
Editorial
Updated:- 2023-10-09, 18:16 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 7ல் கடந்த வாரம் விசித்ரா மற்றும் ஜோவிகா இடையே படிப்புகுறித்த வாதம் நடைபெற்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சீசன் 7 தொடங்கிய நாள் முதல் போட்டியில் நறுக்கு, நறுக்கு என்ற கேள்வியும், நான் தான் பெருசு என்ற பதில்களும் பிரபல போட்டியாளர்களிடையே நடந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த முறை பிக்பாஸ் 7 கன்ஃபெசன் ரூமில் பேசியுள்ளனர்.

 

கடந்தவாரம் கேப்டன்சி எப்படியிருந்தது என  ஹவுஸ் மேட்ஸ் விலக்கியிருந்தனர். விஜய் வர்மா செயல்பாட்டுக்கு ஸ்டிரைக் கொடுத்துக் கண்டிக்கவும் செய்தார் ஆண்டவர் கமல். ஹவுஸ்மேட்களுக்கிடையே கேப்டன்சி குறித்து கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தார் விஜய் வர்மா. 

vijay varma ()

 

பிக்பாஸ் சீசன் 7 போட்டியில் தொடர முடியாது என்று பவா செல்லதுரை மற்றும் நடிகை மாயா கிருஷ்ணன் பேசி இருக்கின்றனர். மாயாகிருஷ்ணனுக்கு புத்திமதி சொல்லி இந்த நிகழ்ச்சியில் சஷ்டெயின் செய்வது குறித்து விளக்கம் கொடுத்து மனதை மாற்றியிருக்கின்றனர். ஆனால் பவா செல்லதுரை என்ன சொன்னாலும் கேட்காமல் தனக்கு சுகர் இருக்கின்றது. மருந்து மாத்திரைகள் உணவு சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கம் கொடுத்துத் தான் விலகப் போவதாகத் தெரிவித்து இருக்கின்றார். அவர் அந்த முடிவில் எந்த மாற்றத்தையும் செய்யத் தயாராக இல்லை விளையாட்டை விளையாட்டாகத் தான் விளையாட வேண்டும். தனது உடல் நிலைக்கு அவ்வாறு செய்தால் உடல்நிலையை பாதுகாக்க முடியாது என்று எழுத்தாளர் பவா செல்லதுரை தெரிவித்து இருக்கின்றார்.

 

 சக போட்டியாளர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பாவா வெளியேறக் காத்திருக்கின்றார். இந்த வாரம் பவா செல்லதுரை வெளியேறுவது உறுதியாக இருக்கின்றது. ஏற்கனவே முதல் எலிமினேஷனில் அனன்யா வெளியேறியிருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது மேலும் இந்த முறை வெளியேறுபவர்களில்  பெயராகப் பவா  பெயர் இடம்பெறும். அனன்யா டாட்டூ  குத்திய இடங்கள்குறித்து விசித்திரா பேசியது தவறு என்று சொல்லப்படுகின்றது. டாட்டூ அணிவது தனது விருப்பம் எனவும் அனன்யா தெரிவித்துள்ளார். வினுசாவிடம் அன்னயா நட்புடன் இறுதியாகச் சொன்னது என்னவெனில் உணர்ச்சி வயப்பட வேண்டாம் புத்திசாலித்தனமாக இருக்க கேட்டது ஆகும். 

 

மேலும் படிக்க:  பிக்பாஸ் சீசன் 7 விடாபிடியாக நிக்கும் மாயா விழுந்துருவாங்களா ஹவுஸ்மேட்

ஜோவிகா படிப்புபற்றி விசித்திரா சொன்ன வார்த்தைகள் பரபரப்பை ஏற்படுத்தியிருகின்றன. சாதாரண மக்களும் விசித்ரா பேசியதில் தவறு என்ன என்று பேசியுள்ளனர்.  கல்வி என்பது முக்கியம் அடிப்படை கல்வி என்பது அவசியமான ஒன்றாகும் என்று விசித்திரா விளக்கி இருக்கின்றார். விசித்திர கல்வி பற்றிப் பேசியது சரி என்பதை கமல் தெரிவித்து அவ்வாறே கல்வியை திணிப்பது தவறு என்பது பேசி மட்டும் படாமல் விலகிப் பேசி இருக்கின்றார்.

 

மேலும் படிக்க: சூடுபிடிக்கும் பிக்பாஸ் சுளுக்கு எடுத்துக்கொள்ளும் போட்டியாளர்கள்

 

 ஆனால்  ஜோவிகா சினிமா பின்னணியில் இருப்பவர் அதனால் அவருக்குப் படிப்பு ஒரு பெரிய விஷயம் அல்ல, சாதாரண மக்களுக்குக் கல்வி தான் எல்லாம் என்பதை விசித்ரா பேசிய மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். ஒரு சாமானியனை மனதில் வைத்து விசித்திராவின் பேச்சு அமைந்திருக்கிறது என்றும் சப்போர்ட் செய்கின்றனர். இந்த வகையில் ஜோவிகா நல்லா படிக்கும் பெண்ணின் சின்ன வயதில் அவர் படித்ததை தற்போது வைரல் செய்த வருகின்றனர். அது சரி சின்ன வயதில் தானே படித்தார்கள் தற்போது தாய்மொழியான தமிழ் எழுதப் பேசத் தெரியாது என்று கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சிகள் கூறும்போது தமிழுக்கு என்று என்ன மரியாதை இருக்கின்றது என்ற விமர்சனமும்  இருக்கின்றது. ஆக எவ்வளவு பெரிய துறையில் இருந்தாலும் அடிப்படையாகத் தாய் மொழி தெரிந்து  இருக்க வேண்டியது முக்கியமாகக் கருதப்படுகின்றது.

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com