herzindagi
the  one

Bigboss Season 7 Tamil update: சூடுபிடிக்கும் பிக்பாஸ் சுளுக்கு எடுத்துக்கொள்ளும் போட்டியாளர்கள்

கற்பனை கதையில் பில்டப் தரும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள். சமையல்கட்டில் சார்ட் சலசலப்பு
Editorial
Updated:- 2023-10-04, 14:07 IST

பிக்பாஸ் சீசன் 7   முதல் நாளே சூடு பிடித்துவிட்டது. இரண்டாம் நாளில்  சுமால் பாஸ்  வீட்டில் சமையல் செய்யப் போகும் பிரபல போட்டியாளர்கள் அதையும் பாத்துருவோம் வாங்க என மற்ற பிரபலங்கள். 

 பிக்பாஸ் இரண்டாம் நாள் ஆடல் பாடலுடன் அழகாகத் தொடங்கியது. பிக்பாஸ் இரண்டாம்நாள்  பிக்பாஸ் சீசன் 7 போட்டியானது வழக்கம்போலத் தொடங்கியது. இந்தப் போட்டியில் ஆறு போட்டியாளர்களுக்குப் பிக்பாஸ் செக் வைத்துச் சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்ப பட்டுள்ளனர். பிக்பாஸ் தமிழ் சீசன் அக்டோபர் ஒன்றில் சிறப்பாகத் தொடங்கியது 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றனர். 

 

இரண்டு வீடு கான்செப்ட் இந்த மாதிரி இருப்பதால் போட்டி விறுவிறுப்பாகவே இருக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன. இரண்டாம் வீட்டில் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்று நமக்குள் ஒரு கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றது. பிக்பாஸ் வீட்டு பிரமோவில் கேப்டன்ஷிப் பதவியில் விஜய் தக்க வைத்துக் கொண்டு உள்ளார்.

 

மேலும் படிக்க : Big boss Season 7 Tamil: கோலகலமாக 18 பிரபலங்களுடன் தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 7

 

இந்தப் பிக்பாஸ் இரண்டாம் வீடு இது ஒரு ஜெயில் போலத் தற்போதைக்கு காட்சிப்படுத்தப்படுகின்றது. அந்த வாரத் தலைவரான விஜய் தன்னை கவராத பிக்பாஸ் போட்டியாளர்கள்பற்றிப் பேசி இருந்தார். இங்கு இரு வீடுகள் இரண்டு நாமினேசன்  வாய்ப்பு உள்ளது. பிக்பாஸ் 7 ஆம் சீசனில்  வனிதாவின் மகள் ஜோவிகா அதிக எண்ணிக்கை நாமினேசனில் சிக்கியுள்ளார்.

 

பாவா செல்லதுரை, அனன்யா, அனுஷா, ரவீனா, யுகேந்திரன், ஆகியோர் இரண்டாம் வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளனர். பிக்பாஸ் வீட்டிற்கு அவர்கள் திரும்பும் வரை பிக் பாஸ் அவர்களிடம் பேசமாட்டாராம். மற்ற வீட்டில் யாரும் முதல் வீட்டில் இருப்பவர்கள் செல்லமாட்டார்கள். மேலும் சுமால் பாஸ் வீட்டில் இருப்போர் சமையல் போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும். சுமால் பாஸ் வீட்டில்  விசித்திரா மற்றும் யுகேந்திரன் ஆகியோர்  உதவி செல்லச் சென்று இறுதியில் அங்கேயே இருக்க வேண்டிய சூழல் ஆகிவிட்டது.

 மேலும் படிக்க:  பிக்பாஸ் சீசன் 7 ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா

பிரதீப் ஆண்டனி மக்கள் மத்தியில் பேசியது சரியில்லை என்ற கமெண்ட்களை பெற்று வருகின்றார். இந்தப் பிக்பாஸ் சீசனில் எதிர்பார்த்ததை விடப் போட்டி பொறாமைகள் வலுவான கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்படும்.  பிக்பாஸ், சுமால் பாஸ் வீடுகளால் முட்டல், மோதல்கள் அதிகரிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இப்போதே சமையல் மெனுவில் சரவெடி வாக்குவாதம் ஆரம்பம் ஆகியுள்ளது. சப்பாத்தி மெனுவை வைத்து பிரதீப் மற்றும் விஜய் இடையே காரசார பேச்சு முட்டியுள்ளது. 

BALI TRAVELnew

 

இரண்டாம் நாள் புரோமோவில் யுகேந்தர் மற்றும் விசித்திரா சமைக்கவுள்ளனர். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்  12 பேர் விருப்பபடிதான் சுமால் பாஸ் வீட்டில்  சமைக்கப்பட வேண்டும் ஆகியவை இடம் பெற்றன.  

Image source: Google 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com