herzindagi
big card

Bigboss 7 house mates task: பிக்பாஸ் சீசன் 7 விடாபிடியாக நிக்கும் மாயா விழுந்துருவாங்களா ஹவுஸ்மேட்

பிக்பாஸ் சீசன் 7  ரியால்டி சோவில் அடித்து ஆடும் மாயா கிளின் போல்ட் ஆவார்களா பிரபல போட்டியாளர்கள் 
Editorial
Updated:- 2023-10-05, 15:35 IST

படு கிளவராக விளையாட முயற்சி செய்யும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 போட்டியாளர்கள், ஆளுக்கு ஒரு கொடியை  நாட்டித் தங்களை வெளிச்சத்தில் கொண்டு வர மல்லுக்கு நிற்கிறார்கள், என்பதை அவர்களுடைய பேச்சுக்களும் ஆட்டிட்டியூடும் தெரிவிக்கின்றது. 

 

சும்மா இருக்கற சங்கை ஊதி கெடுக்கும் மாயா

மாயா ஸ்டேண்டிங் காமெடி செய்து பின்பு விக்ரம் போன்ற படங்களில் ஒரு சிறிய பாத்திரங்களில் நடித்துத் தனக்கான அங்கீகாரத்தை தேடிக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் அவருக்குப் பிக்பாஸ் ஒரு பெரும் வாய்ப்பு என்றே சொல்லலாம். அப்படி இருக்க அதனைக் கிளவராக அவர் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்.

 

ஏன் என்னை அப்பிடி பாக்குறீங்க என அதிர கேக்கும் மாயா 

தேடிப்பிடித்து கூல் சுரேஷிடம் அவர் மல்லுக்கட்டிப் பேசிக் கொண்டிருக்க, இடையில் விஷ்ணு பகடைக்காயாகி  கடைசியில் விஷ்ணுவுக்கும் மாயாவுக்கும் இடையே பேச்சு முட்டுகிறது. இதனால் விஷ்ணு வெளிப்படையாகப் பேசி வருகிறார். தனக்கு மதிப்பு இல்லை தனது பேச்சினை எடுத்துக் கொள்ளவில்லை என்று பேசிக் கொண்டிருக்கும் போதே மாயா விலகிச் செல்கிறார். இது சரியான போக்கு அல்ல என்பதை தெளிவாக விஷ்ணு விளக்கிகிறார். அதையும் டோண்ட் கேர் என மாயா சொல்லி விளகுகிறார். 

maya seyyum maya

 

 கதை சொல்லி டாஸ்கில் பாவா கதை சொல்ல அந்தக் கதையை முழுமையாக உள் வாங்காமல், அவர் எதோ தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசுகின்றாரென மாயா தனி ரூட் எடுத்து, இடையில் ஒரு பெண்ணின் இடையை வெண்ணெய் என்று பேசிய பேச்சினை சரியில்லை என்றும் அவர் அசால்டு பெண்ணியம் பேசுகின்றார். ஆக மொத்தம் ஆளுக்கு ஒரு கொடி  என்ற ஒரு எண்ணப் போக்குடன்  நகர்ந்து கொண்டிருக்கின்றது. பிக் பாஸ் மாயா கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஃபீல் பண்ண முயற்சிக்கின்றார்.

நோ யுவர் ஹவுஸ் இமேஜ் டாஸ்கில் மாயா அழகாகத் தன்னை தன் புகழையும் தான் பிரபலமானவர் என்பதையும் விஷ்ணுவுடன் போட்டியிட்டு விளக்குகின்றார். அந்த இடத்தில் விஷ்ணுவும் சரியான தொடக்கம் கொடுத்துப் பின்பு மாயாவின் பேச்சுகளால் வீணாக எமோஷனலாகி மாயா பிரதீப் ஆண்டனியை மதிக்காமல் சென்றது போன்ற குறைகளைச் சுட்டிக்காட்டி பேச வேண்டிய டாஸ்க் தலைப்புகளிலிருந்து விலகிப் பேசுகிறார். இதனால் எளிதாக இவர் தடம் புரள்கிறார். அடுத்தபடியாக மாயா வெரிஃபைட் வாங்கி வெற்றிகரமாகத் நடை போடுகிறார். மாயா தெளிவாகச் செயல்படுகின்றார் என்பது தனியாகவே நமக்குத் தெரிகின்றது. 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com