
90’s கிட்ஸின் கனவுக் கன்னியாக திகழ்ந்த நடிகை திரிஷா திரையுலக பயணத்தில் 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமீர் இயக்கத்தில் மவுனம் பேசியதே படத்தின் மூலம் நடிகை திரிஷா அறிமுகமாகி இருந்தாலும் அவர் அதற்கு முன்பாகவே 1999ல் ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாகத் தோன்றி இருக்கிறார்.

திரிஷா முதன் முதலில் ஷ்யாமுடன் லேசா லேசா படத்தில் நடிக்கவே ஒப்பந்தமானார். ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக அந்தப் படம் தாமதமாக 2003ல் வெளியானது. இதனிடையே அவர் சூர்யாவுடன் நடித்த மவுனம் பேசியதே படம் 2002ல் வெளியாகிவிட்டது. சந்தியா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய விக்ரமுடன் சாமி, ஸ்ரீகாந்துடன் மனசெல்லாம், தருணுடன் எனக்கு 20 உனக்கு 18, சிம்புவுடன் அலை என 2003ல் மட்டும் அவர் நடித்த ஐந்து படங்கள் வெளியாகின. இதில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படம் தெலுங்கு மொழியிலும் வெளியானது.

2004ல் வெளியான கில்லி திரைப்படம் மூலம் இளைஞர்களின் மனதில் தனலட்சுமியாக குடிபெயர்ந்தார். மணிரத்னமின் ஆயுத எழுத்து திரைப்படத்தில் நகரத்து பெண்ணாக நடித்தார். இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் திருப்பாச்சி படத்தில் நடித்தார். அந்தாண்டு தெலுங்கில் அவர் நடித்த உனக்கும் எனக்கும் படத்தின் ஒரிஜினலான நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தனாவிற்கு சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதும் கிடைத்தது.
மேலும் படிங்க விடாமுயற்சி நாயகி ரெஜினா கேசன்ட்ராவுக்கு பிறந்தநாள்
தெலுங்கு, தமிழ் என இரு திரையுலகிலும் மாறி மாறி படங்கள் நடித்து வந்தார். 2010ல் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது. அதுவரை தனலட்சுமி என செல்லமாக அழைக்கப்பட்ட திரிஷா, விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு ஜெஸ்ஸியாக ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்தார்.

காதலில் தோற்கும் ஒவ்வொரு இளைஞனின் மனதிலும் நிச்சயம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு பேசும் வசனம் மறக்க முடியாத ஒன்றாகும். உலகில் எத்தனையோ பெண்கள் இருந்தும் ஏன் ஜெஸ்ஸியை காதலித்தேன் என சிம்பு நினைப்பது போல நண்பர்களிடம் இதே வசனத்தில் தங்களது காதலியின் பெயரை மாற்றிக் கூறி இளைஞர்கள் வருந்துவதுண்டு.
அதன் பிறகு ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார். தனலட்சுமி, ஜெஸ்ஸி கதாபாத்திரங்களை முறியடிக்கும் வகையில் 96 திரைப்படத்தில் ஜானுவாக ரசிகர்களை உருக்கினார். அந்தப் படத்தில் என்ட்ரி காட்சி முதல் இறுதி காட்சி வரை ஜானுவாகவே வாழ்ந்திருப்பார். விஜய் சேதுபதியை பிரிய மனமில்லாமல் அவர் அழும் காட்சிகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று.

மேலும் படிங்க கைதி 2 - முக்கிய தகவலை பகிர்ந்த நடிகர் நரேன்
இந்தாண்டு அவர் நடித்திருந்த பொன்னியின் செல்வன் 2, லியோ, தி ரோட் என மூன்று படங்கள் வெளியாகின. அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். திரையுலக பயணத்தில் 21 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் திரிஷாவுக்கு ஹெர் ஜிந்தகி குழு சார்பாக வாழ்த்துகள்.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com