herzindagi
image

தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கும் போது கட்டாயம் இந்த விஷயங்களைப் பின்பற்றுங்கள்!

பட்டாசுகள் இல்லாமல் தீபாவளி முழுமையாக நிறைவு பெறாது. மகிழ்ச்சியைஅளிக்கும் பட்டாசுகளால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்க கட்டாயம் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
Editorial
Updated:- 2025-10-14, 15:27 IST

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ளது. இந்த நாளில் புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடிக்கும் கொண்டாடவில்லையென்றால் திருப்திகரமாக அமையாது. குறிப்பாக குழந்தைகள் எப்போது பட்டாசுகள் வெடிக்கலாம் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படி அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் பட்டாசுகளைப் பாதுகாப்புடன் வெடிப்பது முக்கிய கடமைகளில் ஒன்றாக மாறிவிட்டது. பெற்றோர்கள் கீழ்வரக்கூடிய சில விதிமுறைகளைப் பின்பற்ற குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அவை என்னென்ன? என்பது குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: Diwali 2024: தீபாவளிக்கு எந்த திசையில் விளக்கு ஏற்றலாம்? வாஸ்து டிப்ஸ் உங்களுக்காக!

பட்டாசுகளைப் பாதுகாப்புடன் வெடிக்கும் வழிமுறைகள்:

  • சீனி வெடி, லட்சுமி வெடி, அணுகுண்டு, குருவி வெடி போன்ற அதிக சத்தம் வரக்கூடிய பட்டாசுகளை வெடிக்கும் போது வீட்டிற்கு அருகாமையில் வெடித்தல் கூடாது. மைதானம் அல்லது வீட்டிற்கு அருகாமையில் திறந்த வெளியில் வெடிக்கவும். நீளமான பத்தியைப் பயன்படுத்தி பட்டாசுகளை வைத்த பின்னதாக உடனே கொஞ்ச தூரம் வந்துவிட வேண்டும்.
  • எப்போது பட்டாசுகளை வெடித்தாலும் காலில் கட்டாயம் காலணிகளை அணிய வேண்டும். பட்டாசு வைக்கும் போது வரக்கூடிய நெருப்பு காலில் பட்டவுடன் சீக்கிரம் ஆறாது. எனவே குழந்தைகள் காலணிகள் அணியவில்லையென்றாலும் பெற்றோர்கள் வற்புறுத்தி அணிய சொல்ல வேண்டும்.
  • வீட்டிற்கு அருகாமையில் பட்டாசுகள் வெடிக்கும் போது மின் கம்பிகளுக்கு அருகாமையில் வைத்தல் கூடாது.
  • மழைக்காலம் என்றால் பட்டாசுகளுக்கு நெருப்பு வைத்தவுடன் உடனே பற்றிக் கொள்ளாது. ஒருவேளை பட்டாசு வெடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டால் மீண்டும் பற்ற வைக்க முயற்சிக்காமல் தண்ணீர் ஊற்றி அணைத்துவிடவும்.

மேலும் படிக்க: Diwali Rangoli Designs: தீபாவளிக்கு வீட்டு வாசலை அலங்கரிக்கும் பிரமாண்ட ரங்கோலிகள்

  • பாதியாக எரிந்த பட்டாசுகளை ஆங்காங்கே தூக்கி வீசாமல் தண்ணீரில் நன்கு நனைத்த பின்னதாக தூக்கி எறிய வேண்டும்.
  • பட்டாசுகள் வெடிக்கும் போது குழந்தைகளுடன் பெற்றோர்கள் இருக்க வேண்டும். தண்ணீரை எப்போதும் அருகில் வைத்திருப்பது அவசியம்.
  • கம்பி மத்தாப்பு, புஷ்வானம், தரைச்சக்கரம் போன்ற இரவு நேரத்தில் பட்டாசுகள் வெடிக்கும் போது எளிதில் தீப்பற்றக்கூடிய வகையிலான ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக டெரிகாட்டன், டெரிலின் போன்ற எளிதில் தீ பற்றக்கூடிய ஆடைகள் அணிவதைத் தவிர்த்துவிடுங்கள்.
  • அதிக சப்தம் உள்ள பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். சில நேரத்தில் காது செவிடாகக் கூடும். எனவே இதைத் தவிர்ப்பது நல்லது.
  • கர்ப்பிணிப் பெண்கள் உள்ள வீடுகளில் முடிந்தவரை அதிக சப்தம் உள்ள பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

மேலும் படிக்க: தீபாவளிக்கான 5 அழகான காஞ்சிபுரம் பட்டு புடவைகள்- மகிழ்ச்சியில் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்!

இதுபோன்ற பல்வேறு விதிமுறைப் பயன்படுத்தி தீபாவளி திருநாளில் பட்டாசுகள் வெடிக்க முயற்சி செய்யுங்கள். நிச்சயம் எவ்வித தீ விபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை. தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துக்கள்.

Image credit - Freepik

 

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com