நடிகை சாக்ஷி அகர்வால் தமிழில் காலா, விஸ்வாசம்,ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார். தற்போது பல படங்களில் கமீட் ஆகி நடித்து வருகிறார். சாக்ஷி அகர்வாலின் ஃபிட்னஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை சாக்ஷி அகர்வால் காலையில் எழுந்தவுடன் ஒன்பது ஊற வைத்த பாதாமை சாப்பிடுவாராம்.அதன் பின்பு இஞ்சி டீ குடிப்பாராம்.அதன் பின்பு அரை மணி நேரம் கழித்து டி-டாக்ஸ் கிரீன் ஜூஸை குடிப்பாராம்.அதில் கருவேப்பிலை, பாலக், கொத்தமல்லி, வெள்ளரிக்காய் பாவற்காய் ஆகியவை ஒன்றாக சேர்த்து அரைத்து குடிப்பாராம். இது சருமத்திற்கு பல நன்மைகளை தரும் என்கிறார்.
காலை உணவாக ஆம்லெட் சாப்பிடுவாராம். மதிய உணவாக சப்பாத்தி மற்றும் அதனுடன் நிறைய காய்கறிகளை எடுத்துக்கொள்வாராம்.மாலை இஞ்சி டீ குடிப்பாராம். இரவு உணவுக்கு மீண்டும் சப்பாத்தி மற்றும் காய்கறிகள் சாப்பிடுவாரம். ஆனால் இரண்டு சப்பாத்திக்கு மேல் எடுத்துக்கொள்ள மாட்டாராம்.
இந்த பதிவும் உதவலாம் : சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் 11 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி?
காலை 10 மணிக்கு வொர்க்கவுட்டை ஸ்டார்ட் செய்து விடுவாராம்.அதிலிருந்து 1 மணி நேரம் தீவிரமாக வொர்க்கவுட் செய்வாராம். பிளாங்க்ஸ், ஆப்ஸ் மற்றும் கார்டியோ போன்ற வொர்க்கவுட்களை செய்வாராம். நடிகை சாக்ஷி அகர்வால் டயட் மற்றும் வொர்க்கவுட்டை தவறாமல் பின்பற்றி வருவதால் ஃபிட்டாக இருக்கிறார். மேலும் பல வொர்க்கவுட் வீடியோக்களை சாக்ஷி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com