நடிகை ஸ்ருதி ஹாசன், தன்னுடைய முடி பராமரிப்பு முறை குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய முடிக்கு பயன்படுத்தும் எண்ணெய் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க: வெயிலின் தாக்கத்தால் முகம் கருமையாகி விட்டதா? கவலையே வேண்டாம்... இந்த 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க!
சினிமா பிரபலங்களின் சரும பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு முறை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என எல்லோருக்கும் ஆர்வம் இருக்கும். அந்த வகையில், நடிகை ஸ்ருதி ஹாசனின் முடி பராமரிப்பு முறை குறித்து இதில் காணலாம்.
திரை நட்சத்திரங்கள் மீதான மக்களின் கருத்து:
திரையில் தோன்று சினிமா நட்சத்திரங்களை ஒவ்வொரு முறை காணும் போதும், அவர்களுடைய சருமம் மற்றும் தலை முடி என அனைத்தும் சாமானிய மக்களின் கண்களை கவரும் வகையில் இருக்கும். இதற்காக, நடிகர்கள் நிறைய பணம் செலவு செய்து தங்களை பராமரித்துக் கொள்வதாக மக்கள் நினைக்கின்றனர். இதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், சிலர் எளிய சரும பராமரிப்பு முறையை பின்பற்றுகின்றனர்.
நடிகை ஸ்ருதி ஹாசன் ஹேர் கேர் டிப்ஸ்:
அந்த வகையில் நடிகை ஸ்ருதி ஹாசன், தன்னுடைய தலைமுடி பராமரிப்பு குறிப்புகளை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் நுழைந்த போது கமல் ஹாசனின் மகள் என்ற கண்ணோட்டத்தில் ரசிகர்களால் காணப்பட்ட ஸ்ருதி ஹாசன், அதன் பின்னர் தன்னுடைய திறமைகள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். நடிப்பு மட்டுமின்றி இசையின் மீது ஸ்ருதி ஹாசனுக்கு அதீத ஆர்வம் இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே.
ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் கூலி திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, பல்வேறு நேர்காணல்களில் ஸ்ருதி ஹாசன் பங்கேற்று வருகிறார். அதன்படி, ஒரு பேட்டியின் போது தனது தலை முடி பராமரிப்பு முறைகள் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சருமத்தில் இருக்கும் கிருமிகளை போக்கி முகத்தை பளபளப்பாக மாற்ற உதவும் கடல் உப்பு
நடிகை ஸ்ருதி ஹாசனின் தலை முடி பராமரிப்பு முறை:
தனது முடியை சீராக வைத்திருக்க எள் எண்ணெய்யை பயன்படுத்துவதாக நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இத்துடன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்யை கலந்து உபயோகப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது, தன்னுடைய முடியை சரியாக பராமரிக்க முடிகிறது என ஸ்ருதி ஹாசன் தெரிவித்தார்.
மேலும், படப்பிடிப்பு நாட்களின் போது இரவு நேரத்தில் தலை முடியில் எண்ணெய் தேய்த்து விட்டு, மறுநாள் காலை தலைக்கு குளிப்பதாக நடிகை ஸ்ருதி ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். ஸ்ட்ரைட்டனிங் முதல் பல வகையான ஸ்டைலிங் பொருட்களை பயன்படுத்துவதால் தன்னுடைய முடி சேதமடைகிறது என்று கூறும் அவர், அது போன்ற சூழலில் எண்ணெய் மட்டும் இதற்கு தீர்வாக அமைகிறது என தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாசனின் இந்த ஹேர் கேர் டிப்ஸ், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பெரும்பாலவர்களிடம் இருந்து வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து தங்கள் கருத்துகளையும் பொதுமக்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Instagram
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation