நடிகை சதா 2000 த்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் ஜெயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை பெற்றார்.நடிகர் அஜித்துடன் இணைந்து 2006 ஆம் ஆண்டு வெளியான திருப்பதி என்ற படத்தில் நடித்தார்.நடிகர் வினை நடிப்பில் வெளியான உன்னாலே உன்னாலே படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு இன்றும் ரசிகர்கள் உள்ளனர்.
நடிகை சதா 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான டார்ச் லைட் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை.டான்ஸ் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சதா நடுவராக இருந்துள்ளார்.தற்போது ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். நடிகை சதா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவார். சதா ஒரு வொயில்ட் லைஃப் புகைப்பட லவ்வர். எனவே சதா வொயில் லைஃப் போட்டோகிராஃபி என்ற தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் வைத்திருக்கிறார்.
நடிகை சதா லேட்டஸ்டாக போட்டோ ஷூட் செய்து பதிவிட்ட படங்கள் வைரலாகி வருகிறது. இதில் வெள்ளை நிற சிலீவ் லெஸ் உடையை அணிந்துள்ளார். உடைக்கு மேட்சாக சில்வர் கலர் அணிகலன்களை அணிந்திருக்கிறார். மேக்கப்பை பொறுத்தவரை கண்களில் ஐ ஷேடோ , கன்னத்தில் பிளஷ் மற்றும் உதட்டில் லிப் ஸ்டிக் போட்டு ரசிக்க வைத்திருக்கிறார்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com