
நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதையடுத்து ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்தார். ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா நடித்த அனு என்ற கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தில் ரித்திகா சிங் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. ரித்திகா சிங் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். லேட்டஸ்டாக போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம் : பார்பி டால் போல இருக்கும் நடிகை மிருணாள் தாகூர்! வைரல் போட்டோஸ்
நடிகை ரித்திகா சிங் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் செய்திருந்தார். இந்த புகைப்படத்தில் கோல்டன் நிற கிராப் டாப் மற்றும் ஸ்கர்ட் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார்.அணிகலன்களை பொறுத்தவரை காதில் பெரிய தோடு மற்றும் கையில் வளையல் போட்டிருக்கிறார். மேக்கப்பை பொறுத்தவரை கண்ணிற்கு ஐ லேனர், மஸ்காரா மற்றும் உதட்டிற்கு லிப் ஸ்டிக் போட்டிருக்கிறார். ஹேர் ஸ்டைலை பொறுத்தவரை கர்லி ஹேர் லுக்கில் ரசிக்க வைத்திருக்கிறார்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com