
2011 ஆம் ஆண்டு வெளியான உதயன் படம் மூலம் நடிகை பிரணித்தா தமிழ் சினிமாவில் அறிமுகமானார்நடிகர் கார்த்தியுடன் இணைந்து சகுனி படத்திலும், நடிகர் சூர்யாவுடன் மாஸ் படத்திலும் ஜோடியாக நடித்திருந்தார்.பிரணித்தாவுக்கு கொரோனா லாக்டவுனில் திருமணம் நடைப்பெற்றது.இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.குழந்தை பிறந்த இரண்டு மாதத்திலேயே உடல் எடையை குறைத்து ஆச்சர்யப்படுத்தினார்.
தற்போது திரைப்படங்களில் மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார்.கன்னடம் மற்றும் மலையாளத்தில் படங்கள் நடித்து வருகிறார். நடிகை பிரணித்தா சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கக்கூடியவர். விதவிதமான போட்டோ ஷூட் படங்கள், குழந்தையுடன் இருக்கும் படங்கள் மற்றும் யோகா செய்யும் படங்கள் என அப்டேட் செய்துக்கொண்டே இருப்பார்.
லேட்டஸ்டாக மாடர்ன் மற்றும் ட்ரெடிஷ்னல் உடையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் மாடர்ன் வெள்ளை நிற க்ராப் டாப் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கியூட்டாக போஸ் கொடுத்திருக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் பிங்க் கலர் நெட் சாரி போட்டு ட்ரெடிஷ்னல் லுக்கில் ரசிக்க வைக்கிறார்.
இந்த பதிவும் உதவலாம் : முகம் உடனே பளபளக்க பாரதி கண்ணம்மா வெண்பாவின் இன்ஸ்டண்ட் ஃபேஸ் பேக்!

இரண்டு லுக்கிலும் புகைப்படத்தை பதிவிட்ட பிரணித்தா உங்களுக்கு எந்த லுக் பிடித்திருக்கிறது என கேப்ஷனும் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com