Pooja Hegde : ஐலேண்ட் பேபி! நடிகை பூஜா ஹெக்டேவின் மாலத்தீவு வெக்கேஷன் போட்டோஸ்..

நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வெக்கேஷன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 
pooja hegde maldives clicks photos

நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்திலும் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்திலும் நடித்திருந்தார். பீஸ்ட் படத்திற்கு பிறகு தமிழில் எந்த படங்களிலும் பூஜா ஹெக்டே கமீட் ஆகவில்லை.

சமீபத்தில் ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் வெளியான படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு அடுத்த படம் குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பகிர்வார்.

இந்நிலையில் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு மாலத்தீவிற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்தபடி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.ஹாட்டான பச்சை நிற ஷார்ட் ட்ரெஸில் புகைப்படங்களை பதிவிட்டு ‘ஐலேண்ட் பேபி’ என்று கேப்ஷனில் குறிப்பிட்டிருக்கிறார்.

pooja hegde hot

மற்றொரு புகைப்படத்தில் கருப்பு நிற கிராப் டாப் மற்றும் டெனிம் ஷார்ட்ஸ் போட்டு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கிறார்.அதற்கு கேப்ஷனாக ’இயற்கையான காற்றை சுவாசிக்கும் தெரப்பியை பரிந்துரைக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.மேலும் மாலத்தீவில் தனது நண்பர்களுடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். பூஜா ஹெக்டே பகிர்ந்த இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP