நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் ஆத்மிகாவிற்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது.விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் படத்திலும் ஆத்மிகா நடித்திருந்தார். ஆத்மிகா இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தான் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிடுவார்.
சமீபத்தில் நடிகை ஆத்மிகா இமயமலை பயணத்தை மேற்கொண்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஜெயிலர் ரிலீஸிற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.
தனது இமயமலை பயணம் குறித்து ஆத்மிகா பதிவிட்டிருப்பதில், பாபாஜி குகைக்குச் செல்ல அவரிடம் இருந்து ஒரு தெய்வீக அழைப்பு வந்தது. சிறிதும் யோசிக்காமல் கிளம்பிவிட்டேன்.இங்கு சென்றடைவதற்கு கடினமான பயணங்களை மேற்கொண்டேன்.ஏறக்குறைய மரண அனுபவத்தை எதிர்கொண்டேன்.ஆனால் நல்ல விஷயங்கள் எளிதில் வராது.சஹஸ்ர சக்கரத்தை நோக்கி குண்டலினியை எழுப்புவது என்பது உண்மை தேடுபவர்களுக்கு எப்போதும் ஒரு கனவு. அந்த வகையில், நான் குகைக்குள் நுழைந்து தியானத்திற்கு உட்காரும் போது ஆழமாக உணர்ந்தேன்.
இந்த பதிவும் உதவலாம் :வாடகை வீட்டில் வசிக்கும் நடிகை ஆலியா பட்.. ஒரு மாசத்திற்கு இத்தனை லட்சமா!
என் வாழ்நாளில் இதற்கு முன் இதுபோன்ற சக்தி மற்றும் மகத்தான தெய்வீக அனுபவத்தை அனுபவித்ததில்லை. உயிரினங்கள் மற்றும் வாழ்க்கை குறித்த எனது முழு பார்வையும் மாறியது. அவரால் நிபந்தனையின்றி ஆசீர்வதிக்கப்பட்டேன்.
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும், அவர்கள் எங்கிருந்தாலும், தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது அதை அனுபவிக்கத் தகுதியானவர்கள். உலகப் பொருள் சார்ந்த விஷயங்கள் மற்றும் சாதனைகள் தவிர, ஒருவர் தனது அன்றாட வாழ்வில் இரக்கம் மற்றும் தீவிர யோகப் பயிற்சியின் மூலம் ஞானம் எனப்படும் மிக உயர்ந்த நுண்ணறிவை அடைவதற்கான ஆன்மீக மண்டலங்களையும் வழியையும் புரிந்து கொள்ள வேண்டும்.அன்புடன் வாழுங்கள், அன்பைப் பரப்புங்கள், அன்பாக மாறுங்கள்! அன்பு என்பது கடவுள் என பதிவிட்டுள்ளார்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation