herzindagi
amala paul different look photos

Amala Paul Photos : வித்தியாசமான லுக்கில் நடிகை அமலா பால்..

நடிகை அமலா பால் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது. <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-08-30, 11:00 IST

நடிகை அமலா பால் தமிழில் மைனா படம் மூலம் பிரபலமானார்.அதையடுத்து தொடர்ந்து படங்கள் நடித்தார்.முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ஜெயம் ரவியுடனும் இணைந்து படங்கள் நடித்திருக்கிறார். அமலா பால் நடித்த ஆடை திரைப்படம் பல விமர்சனங்களை பெற்றது.ஆனால் இந்த படத்தில் தைரியமாக நடித்ததற்காக பாராட்டுக்களும் குவிந்தன. 

அமலா பால் நடிப்பில் தமிழில் கடைசியாக காடவர் என்ற படம் வெளியானது. இந்த படத்தை இவரே தயாரித்து நடித்திருந்தார்.அதையடுத்து மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அமலா பால் ஆன்மிகம் , யோகா, தியானம் என அனைத்திலும் ஈடுபாடுடன் இருக்கக்கூடியவர். இது குறித்து பல பதிவுகளை இன்ஸ்டாவில் போட்டிருக்கிறார்.

இந்த பதிவும் உதவலாம் : சிவப்பு நிற புடவையில் சொக்க வைக்கும் அழகில் ரகுல் ப்ரீத் சிங்!

amala paul new look

அமலா பாலுக்கு புதுப்புது இடங்களுக்கு சென்று எக்ஸ்ப்ளோர் செய்வது என்றால் பிடிக்குமாம்.சமீபத்தில் கோவாவிற்கு சென்று பிகினி உடையில் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அந்த படங்கள் வைரலானது.இந்நிலையில் ஹேண்ட் பாட்டரி செய்வதை போட்டோஸ் மற்றும் ரீல்ஸ் வீடியோவாக பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தில் அமலா பால் நோ மேக்கப் லுக்கில் இருக்கிறார்.

மேலும் எப்போதும் போல இல்லாமல் சற்று வித்தியாசமான நிலா வடிவில் பொட்டு வைத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com