herzindagi
Director Parthiban

"இயன்றதை செய்வோம்" மாதர் பிரச்சினைக்கு உதவிய நடிகர் பார்த்திபன்

இயன்றதை இதயத்துடன் செய்வோம் என மாதர் பிரச்சினைக்காக உறிபஞ்சுகளை வழங்கி இருக்கிறார் நடிகர் பார்த்திபன்.
Editorial
Updated:- 2023-12-12, 21:53 IST

மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய துயரத்திலிருந்து மக்களை மீட்க தன்னார்வலர்கள் கொஞ்சம் கொஞம்சாகக் களத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். சில நாட்களுக்கு முன் நடிகர் பார்த்திபன் சைதாப்பேட்டை பகுதிக்குச் சென்று பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கினார். அது தொடர்பாக உணர்ச்சிவசப்பட்டு எக்ஸ் தளத்தில் அரசாங்கத்திற்கு எதிராகச் சில கேள்விகளையும் முன்வைத்தார்.

இந்த நிலையில் மகளிருக்கு தன்னார்வலர்கள் மூலம் உறிபஞ்சுகளை நடிகர் பார்த்திபன் வழங்கி இருக்கிறார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது : மாத’ர் பிரச்சனைகளை மிகப் பெரிய சவாலாகச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதுவும் மாற்று துணி கூட இல்லாமல் அல்லாடும் இதுபோன்ற இடர் காலங்களில்! ஒரு குடும்பத்தையே லகுவாக தாங்கும் அவர்கள் சக்தியிழக்கும் சமயங்களில் அணுசரனையாய் உதவுதல் அவசியமாகிறது. 

மேலும் படிங்க “இனி ஒரு விதி செய்வோம்” மக்களின் துயரை கண்டு உணர்ச்சி வசப்பட்ட பார்த்திபன்

திருமதி நயன்தாராவும் இன்னும் பலரும் இதைப் புரிந்துக் கொண்டு விரைந்து செயல்பட்டார்கள். குறிபறிந்து உதவுதலில் ஆணென்ன ? பெண்னென்ன ? இருபாலுமே ஒரு பெண்ணிடமிருந்து வந்தவர்கள் தானே ? இயன்றதை இதயத்துடன் செய்வோம். விமர்’சனங்களை மீறி உள்மன நிம்மதி என்ற விமோட்சனம் பெறுவோம் எனக் கூறியுள்ளார். 

இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் மூலம் உறிபஞ்சுகளை பெண்களுக்கு வழங்கி இருக்கிறார். அதே நேரத்தில் இரவு பகல் பாராமல் பொதுமக்களுக்கு உதவிய ஹரிஹரனுக்கு உணவளித்து அவரது பணியைத் தொடர வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார். 

மேலும் படிங்க “கைகோர்ப்போம் துயர்துடைப்போம்” - ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் அன்பு கட்டளை

மேலும் அடுத்த தலைமுறையையாவது முறையான மக்களாட்சியை (மக்களுக்கு மட்டுமே சேவை செய்யும்) கற்பித்து, மழைநீரோடு கலந்துவிட்ட கழிவுகளை அகற்றி சுத்தமாக்கி பருகுவோம் எனப் நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com