image

உங்கள் பணியில் முன்னேற்றம் பெற வேண்டுமா? நீங்கள் பின்பற்றக் கூடிய எளிய வாஸ்து குறிப்புகள்

உங்கள் பணியில் முன்னேற்றம் காண்பதற்கு வாஸ்து முறைப்படி நீங்கள் வேலை பார்க்கும் இடத்தை எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-11-08, 10:57 IST

வாஸ்து சாஸ்திரம் என்பது பண்டைய இந்திய கட்டடக்கலை அறிவியல் என்று கூறப்படுகிறது. இது நம் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை கொண்டுவர இயற்கையின் கூறுகளை சமநிலைப்படுத்துகிறது. இதன் மூலம், நம் வாழ்க்கையில் பல நன்மைகளை பெறலாம். அதன்படி, உங்கள் பணியில் முன்னேற்றத்திற்கான சில வாஸ்து குறிப்புகளை நாம் காணலாம்.

மேலும் படிக்க: வாஸ்தி ரீதியாக வீட்டில் மீன் தொட்டி வைப்பதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்வோம்

 

லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் திசை:

 

வேலைக்கு பயன்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்களை வைக்கும் திசையில் கவனம் தேவை. மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களை தென் கிழக்கு திசையில் வைப்பது வேலை வாய்ப்பில் வளர்ச்சிக்கு நல்லது. மேலும், மேசையில் உள்ள வயர்கள் மற்றும் கேபிள்கள் சிக்கலின்றி இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

Working women

 

அமர்ந்து வேலை செய்யும் முறை:

 

நீங்கள் அமர்ந்து வேலை செய்யும் விதம் உங்கள் வேலைவாய்ப்பு வளர்ச்சியை தீர்மானிக்கிறது. எனவே, வேலை செய்யும் போது கால்களை குறுக்காக வைத்து உட்காருவதை தவிர்க்க வேண்டும். இது உங்கள் வேலையில் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். மேலும், அலுவலகத்தில் வேலை செய்யும்போது அதிக முதுகுப் பகுதி கொண்ட நாற்காலியில் அமர்வது பதவி உயர்வுக்கு வழிவகுக்கும். வீட்டில் இருந்து வேலை செய்யும் போது சரியான ஒழுக்கத்துடன் வேலை செய்வது வளர்ச்சிக்கு அவசியம்.

மேலும் படிக்க: தலைவலியைக் குறைக்க வீட்டில் எளிதாக பயன்படுத்தக்கூடிய வாஸ்து குறிப்புகள்

 

வீட்டில் வேலை செய்யும் இடம்:

 

வீட்டில் இருந்து வேலை செய்வது இப்போது பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. சிறந்த பலன்களை பெற, நீங்கள் வேலை செய்யும் இடம் படுக்கையறைக்கு அருகில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், சதுரம் அல்லது செவ்வக வடிவிலான மேசை வைத்திருப்பது சிறந்தது.

Workplace

 

சரியான திசையில் வேலை செய்தல்:

 

வடக்கு திசையில் அமர்ந்து வேலை செய்வது நல்லது. உங்கள் முதுகுக்கு பின்னால் ஒரு உறுதியான சுவர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது உங்களை நிலையாக வைத்திருக்கும். வேலை செய்ய அமரும் இடத்தின் பின்புறம் ஜன்னல் இருக்கக்கூடாது. ஏனெனில், இது உங்களை குழப்பமடைய செய்து கவனத்தை சிதறடிக்கும்.

 

இறுதியாக, இந்த பிரபஞ்சத்தின் மீதும், அதன் ஆற்றலின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல மாற்றத்தை நீங்கள் உணரலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com

;