herzindagi
image

வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு கோடிகளில் வருமானம்; நிகர மதிப்பு விவரம்

2.6 கோடிக்கு மேல் பின்தொடர்பவர்களை வைத்துள்ள வில்லேஜ் குக்கிங் சேனலின் வருமானம் என்ன ? வாரத்திற்கு ஒரு வீடியோ என மாதத்திற்கு பதிவிடப்படும் 4 வீடியோக்களுக்கு எவ்வளவு கிடைக்கும் ? இதுவரை எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள் உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். வில்லேஜ் குக்கிங் சேனல் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தொடங்கப்பட்டது.
Editorial
Updated:- 2024-11-18, 22:35 IST

செம்மையா சமைக்கிறோம்... பயங்கரமா ருசிக்கிறோம்... இன்னைக்கு ஒரு புடி; எல்லாரும் வாங்க ஆல்வேஸ் வெல்கம் யூ என மிகுந்த உற்சாகத்தோடு கிராமத்து பின்னணியில் 6 ஆண்டுகளுக்கு மேலாக சமையல் வீடியோக்களை வில்லேஜ் குக்கிங் சேனல் பதிவிட்டு வருகிறது. தென்னிந்திய சமையலில் தொடங்கி உலக முழுவதும் பிரபலமான உணவுகளை மலை போல் குவித்து சமைத்து ருசித்து அவற்றை ஆதரவற்றோருக்கும் பகிர்வது வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவின் வழக்கம். 2018ல் தொடங்கப்பட்ட இந்த யூடியூப் சேனல் தமிழகத்தின் முதல் 1 கோடி பின்தொடர்பவர்களை பெற்ற சேனல் ஆகும். இந்த சிகரத்தை தொட்டதற்கு அவர்களுக்கு டைமண்ட் பட்டனும் யூடியூப் சார்பில் வழங்கப்பட்டது. இந்த பதிவில் உள்ள தரவுகள் icons of indian business-ல் இருந்து எடுக்கப்பட்டதாகும்.

village cooking channel income

வில்லேஜ் குக்கிங் சேனல் குழு

புதுக்கோட்டை மாவட்டம் சின்ன வீரமங்கலம் பகுதியில் பிறந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் வில்லேஜ் குக்கிங் சேனலின் சொந்தக்காரர்கள். வயதில் மூத்தவரும் சமையல் வல்லுனருமான பெரியதம்பியின் தலைமையில் இளைஞர்கள் சுப்பிரமணியம், அய்யனார், தமிழ்செல்வன், முத்துமாணிக்கம், முருகேசன் சமையலில் ஈடுபடுவார்கள். இவர்கள் பதிவிடும் வீடியோக்கள் ஹிட் அடிக்க முழு காரணமே உணவை ஆதரவற்றோருக்கு பகிர்ந்து கொடுத்து மனிதத்தை வெளிப்படுத்துவது தான்.

வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல்

வில்லேஜ் குக்கிங் சேனல் சுமார் 2.65 கோடி பின்தொடர்பவர்களை கொண்டது. இதுவரை 231 வீடியோக்களை இந்த சேனலில் பதிவிட்டுள்ளனர். 2018ல் இருந்து இயங்கி வரும் வில்லேஜ் குக்கிங் சேனலில் பதிவிடப்பட்டுள்ள வீடியோக்கள் இதுவரை 767 கோடியே 2 ஆயிரத்து 347 பார்வைகளை பெற்றுள்ளது. வில்லேஜ் குக்கிங் சேனல் உணவு பிரிவில் வருகிறது.

வில்லேஜ் குக்கிங் சேனலின் வருமானம்

யூடியூப்பில் பதிவிடப்படும் ஒவ்வொரு உணவு வீடியோக்கும் ஆயிரம் பார்வைக்கு 45 ரூபாய் முதல் 262 ரூபாய் வரை கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு ஒவ்வொரு வீடியோவிற்கும் ஆயிரம் பார்வைக்கு தலா 50 ரூபாய் கிடைப்பதாக வைத்து கொள்ளலாம். 767 கோடி பார்வைகளை ஆயிரத்தால் வகுத்து ஐம்பதால் பெருக்கினால் 38 கோடியே 35 லட்சத்து 117 ரூபாய் வருகிறது. இதை விட அதிகமாகவும் இருக்கலாம் அல்லது குறைவாகவும் இருக்கலாம். us.youtubers.me தரவுப்படி வில்லேஜ் குக்கிங் சேனலின் நிகர மதிப்பு 2.88 மில்லியன் டாலரில் இருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 24 கோடியே 30 லட்சத்து 93 ஆயிரத்து 773 ரூபாய் ஆகும்.

மேலும் படிங்க கோடிகளில் புரளும் பரிதாபங்கள் சேனல்; வருமானம், நிகர மதிப்பு விவரம்

வில்லேஜ் குக்கிங் சேனலின் மாத வருமானம்

சில ஆண்டுகளுக்கு வில்லேஜ் குக்கிங் சேனல் குறித்து ஆங்கில நாளிதழில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் அக்குழுவுக்கு யூடுயூப்பில் இருந்து மட்டும் மாதம் 10 லட்சம் ரூபாய் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை தவிர முகநூல் உள்ளிட்ட சில வலைதளங்களில் 2 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டினர். அப்போது அவர்களுடைய பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 1.3 கோடி பேர். தற்போது அந்த எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியுள்ளது. எனவே வருமானம் மிக அதிகமாக இருக்கும்.

கொரோனா பேரிடரின் போது முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வில்லேஜ் குக்கிங் குழு 10 லட்சம் ரூபாய் வழங்கியிருந்தது.

Image credits : youtube

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com