
சின்னத்திரையில் டாப் சேனலாக இருக்கும் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரைம் டைம் சீரியல் சுந்தரி. தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் சீரியலாக உள்ளது சுந்தரி. இதில் கேப்ரில்லா செல்லஸ் லீட் ரோலில் நடிக்கிறார். இந்த சீரியலில் இவரின் நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இந்த தொடருக்கு பிறகு கேப்ரில்லா டாப் சின்னத்திரை நடிகை பட்டியலிலும் இடம் பிடித்தார். இதுபோக படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. NH4 என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்து விட்டார். சுந்தரியாக நடிக்கும் கேப்ரில்லா மட்டுமில்லை, இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பலரும் ரசிகர்கள் கொண்டாடும் முகங்களாக மாறிவிட்டனர்.
சன் குடும்ப விருது நிகழ்ச்சியிலும் இந்த சீரியல் பல விருதுகளை அள்ளியுள்ளது. இந்த தொடரின் கதையானது, முழுக்க முழுக்க சுந்த்ரியை சுற்றி நகர்கிறது. கலெக்டராக நினைக்கும் அவளின் கனவு, லட்சியம் அதற்கு தடையாக வரும் திருமணம், கணவனின் துரோகம் என இந்த சமுதயாத்தில் தனி ஒரு பெண் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சுந்தரி சந்திக்கிறார். சுந்தரிக்கு மட்டுமில்லை அனு ரோலில் நடிக்கும் ஸ்ரீகோபிகா, கார்த்திக்காக நடிக்கும் ஜிஷ்னு ஆகியோருக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

கார்த்திக் பற்றிய உண்மை, சுந்தரிக்கு தெரிய வந்த எபிசோடு டி.ஆர்.பியில் முதலிடத்தில் பிடித்து சாதனை பெற்றது. பெண்கள் கொண்டாடும் குடும்ப தொடரான சுந்தரி தற்போது கிளைமாக்ஸை நெருங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கதைப்படி இன்னும் சில நாட்களில் சுந்தரி கலெக்டராக மாறிவிடுவாராம். பின்பு அனுவுக்கு குழந்தை பிறப்பதுடன் கதை முடியும் என தெரிகிறது. இன்னும் சில வாரங்களில் சீரியல் முடிய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
1000 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிப்பரப்பாகும் சுந்தரி தொடர், முடிவுக்கு வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com