herzindagi
image

ஸ்குவிட் கேம் 3, வரலட்சுமியின் வெர்டிக்ட், அம்பி.... இந்த வார ஓடிடி ரிலீஸ்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஸ்குவிட் கேம் மூன்றாவது சீசன் இந்த வாரம் (ஜூன் 27ஆம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. வரலட்சுமி நடித்த தி வெர்டிக்ட் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. வேரு எந்தெந்த படங்கள் எந்த ஓடிடி தளங்களில் வெளியாகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
Editorial
Updated:- 2025-06-26, 21:36 IST

திரையரங்கில் தவறவிட்ட படங்களை ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என்ற காலம் மாறி படத்தின் திரையரங்கை வெளியீட்டை தீர்மானிக்கும் சக்தியாக ஓடிடி தளங்கள் மாறிவிட்டன. பல தயாரிப்பு நிறுவனங்கள் ஓடிடி தளங்களிடம் படத்தை விற்க முடியாமல் ரிலீஸ் தேதியை தள்ளிப்போடுகின்றன. இந்த வாரம் ஒரு சில தமிழ் படங்களே ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் ஆகின்றன. 

ஸ்குவிட் கேம் சீசன் 3 

உலகளவில் அதிக பார்வைகளை பெற்ற வெப் சீரிஸான ஸ்குவிட் கேமின் மூன்றாவது மற்றும் இறுதி சீசன் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. முதல் சீசனின் வெற்றி இரண்டாவது சீசனுக்கான வரவேற்பை பெற்று தந்தது. எனினும் இரண்டாவது சீசன் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. சீசன் இரண்டு முடிவில் ஹீரோ லீ ஜுங் பிடிபட்டு விடுவார். போட்டி நடக்கும் தீவை காவல்துறை கண்டுபிடித்ததா ? ஸ்குவிட் கேமிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதா ? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

தி வெர்டிக்ட் - சன் நெக்ஸ்ட்

கிருஷ்ணா சங்கர் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்த தி வெர்டிக்ட் திரைப்படத்தை நீங்கள் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம். க்ரைம் திரில்லர் படமான தி வெர்டிக்ட்-ல் வரலட்சுமி சரத்குமார் வக்கீலாக நடித்துள்ளார். 2 மணி நேரம் ஓடக் கூடிய இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

அம்பி - சிம்பிளி சவுத்

எல்வின் இயக்கத்தில் ரோபோ சங்கர் லீட் ரோலில் நடித்த அம்பி திரைப்படத்தை சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். திரையரங்க வெளியீட்டில் இப்படம் எந்தவித கவனமும் பெறவில்லை. 

EVOL - டென்ட் கொட்டா 

தெலுங்கு படமான EVOL தமிழ் டப்பிங் செய்யப்பட்டு டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்படத்தை பார்க்கலாம். ராம் யோகி இயக்கத்தில் ஜெனீபர் எமானுவேல் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதே போல அஜய் தேவ்கானின் ரெய்டு 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தி சினிமா ரசிகர்கள் இப்படத்தை காணலாம். இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com